சிராஜ் 5 விக்கெட்டுகள், ஷர்துல் 4 விக்கெட்டுகள்: பிரிஸ்பேன் டெஸ்டில் இந்திய அணிக்கு 328 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிராஜ் 5 விக்கெட்டுகள், ஷர்துல் 4 விக்கெட்டுகள்: பிரிஸ்பேன் டெஸ்டில் இந்திய அணிக்கு 328 ரன்கள் இலக்கு!
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 115.2 ஓவர்களில் 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. லபுசேன் 108, பெயின் 50, கிரீன் 47, வேட் 45 ரன்களும் எடுத்தார்கள். நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் சிராஜ் ஒரு விக்கெட்டையும் எடுத்தார்கள். 

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 336 ரன்கள் எடுத்தது. ஷர்துல் தாக்குர் 67, வாஷிங்டன் சுந்தர் 62 ரன்கள் எடுத்தார்கள். ஹேசில்வுட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் இன்று, ஆஸ்திரேலிய அணி விரைவாக ரன்கள் குவித்து வருகிறது. 4-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது 66.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்தது. ஸ்மித் 55, வார்னர் 48 ரன்கள் எடுத்தார்கள். இதன்பிறகு மழையால் ஆட்டம் குறுக்கிட்டது. ஆஸ்திரேலிய அணி 276 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

மழை ஓய்ந்த பிறகு ஆட்டம் தொடங்கியது. ஸ்டார்க் 1 ரன்னில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். லயன், 13 ரன்களில் ஷர்துல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஹேசில்வுட் 9 ரன்களில் கடைசியாக ஆட்டமிழந்தார். இதன்மூலம் தனது முதல் டெஸ்ட் தொடரில் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் சிராஜ். ஷர்துல் 4 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் 1 விக்கெட்டையும் எடுத்தார்கள். 

ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 75.5 ஓவர்களில் 294 ரன்கள் எடுத்தது. இதனால் 4-வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com