வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிலிருந்து முக்கிய வீரர்கள் விடுவிப்பு

​ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிலிருந்து ஆரோன் பிஞ்ச், மொயீன் அலி, கிறிஸ் மாரிஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :20 ஜனவரி 2021, 2:51 pm

DIN


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிலிருந்து ஆரோன் பிஞ்ச், மொயீன் அலி, கிறிஸ் மாரிஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் போட்டியில் இருக்கும் 8 அணிகள் தங்களிடம் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 21-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகக் குழு முடிவு செய்திருந்தது. இந்த நிலையில், ஐபிஎல் அணிகள் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த வரிசையில் பெங்களூருவிலிருந்து பிஞ்ச், மாரிஸ் போன்ற முக்கிய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கேப்டன் விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், யுஸ்வேந்திர சஹால் உள்ளிட்ட வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

ஆரோன் பிஞ்ச், குர்கீரத் மான், கிறிஸ் மாரிஸ், ஷிவம் துபே, மொயீன் அலி, டேல் ஸ்டெயின், பார்த்திவ் படேல் (ஓய்வு), இசுரு உடானா, உமேஷ் யாதவ் மற்றும் பவன் நெகி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.