ஃபெடரர், நடால், ஜோகோவிச்: அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற இதர வீரர்கள் யார்?
கடைசியாக நடைபெற்ற 18 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 17 பட்டங்களை ஃபெடரர், நடால், ஜோகோவிச் ஆகிய மூவரும்

ஜோகோவிச் - நடால்

ஜோகோவிச் - நடால்
கடைசியாக நடைபெற்ற 18 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 17 பட்டங்களை ஃபெடரர், நடால், ஜோகோவிச் ஆகிய மூவரும் வென்று டென்னிஸ் உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் ஆனாா். இது விம்பிள்டனில் அவரது 6-வது பட்டமாகும். ஒட்டுமொத்தமாக இது அவரது 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். இதன் மூலம் ஓபன் எராவில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற 3-வது வீரா் என்ற பெருமையை ஜோகோவிச் பெற்றுள்ளாா். உலகின் முதல்நிலை வீரரான ஜோகோவிச், விம்பிள்டன் இறுதிச்சுற்றில் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை 6-7 (4/7), 6-4, 6-4, 6-3 என்ற செட்களில் வீழ்த்தினாா்.
கடைசியாக நடைபெற்ற 18 கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் 17 பட்டங்களை ஃபெடரர், நடால், ஜோகோவிச் ஆகிய மூவரும் வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். 2017 முதல் ஜோகோவிச் 8 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் நடால் ஆறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் ஃபெடரர் மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்றுள்ளார்கள். இவர்களுக்கு மூவருக்கிடையில் நுழைந்து ஆஸ்திரியாவின் டொமினிக் தீம், 2020 யு.எஸ். ஓபன் பட்டத்தை வென்றார்.
ஃபெடரர், நடால், ஜோகோவிச் ஆகிய மூவரும் தலா 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்கள். 2004 முதல் இந்த மூவரும் 84% கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்கள். அதாவது, கடைசி 70 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இவர்கள் மட்டுமே 59 பட்டங்களைக் கைவசப்படுத்தியுள்ளார்கள்.
இதர 11 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களில் ஸ்டான் வாவ்ரிங்கா, ஆண்டி முர்ரே ஆகிய இருவரும் தலா மூன்று பட்டங்களும் மற்றும் 5 வீரர்கள் தலா ஒரு பட்டமும் வென்றுள்ளார்கள்.

ஃபெடரர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...