செளதாம்ப்டனில் மழை: 4-ம் நாள் ஆட்டம் ரத்தாகுமா?

நேற்றிரவு மழை பெய்ததோடு இன்றும் மழை பெய்வதால் 4-ம் நாள் மழையால் ரத்தாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. 
செளதாம்ப்டனில் மழை: 4-ம் நாள் ஆட்டம் ரத்தாகுமா?

செளதாம்ப்டனில் மழை பெய்வதால் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது நாள் ஆட்டம் ரத்தாகும் சூழல் நிலவுகிறது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் நகரில் ஜூன் 18 முதல் தொடங்கியுள்ளது. மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முழுவதுமாக ரத்தானது. எனினும் இந்த டெஸ்டில் கூடுதலாக ஒருநாள் ஒதுக்கப்பட்டுள்ளதால் மழையால் ஆட்ட முடிவில் பாதிப்பு ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 3-ம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்தது. கேன் வில்லியம்சன் 12 ரன்களுடனும் டெய்லர் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளார்கள்.

4-ம் நாளான இன்று செளதாம்ப்டனில் மழை பெய்வதால் ஆட்டம் தொடங்கத் தாமதமாகியுள்ளது. நேற்றிரவு மழை பெய்ததோடு இன்றும் மழை பெய்வதால் 4-ம் நாள் மழையால் ரத்தாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com