புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கோப்பை வென்றும் வீடு திரும்பாத கேன் வில்லியம்சன்!

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 8 மாதங்களுக்கு பாதுகாப்பு வளையத்தில் இருக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

News image
Updated On :26 ஜூன் 2021, 2:56 pm

DIN


கரோனா காரணமாக பாதுகாப்பு வளையத்திலிருப்பது கடினமானது, மனச் சோர்வை உண்டாக்குகிறது என்ற புகார்கள் எழும் சூழலில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 8 மாதங்களுக்கு பாதுகாப்பு வளையத்தில் இருக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்ற நியூசிலாந்து அணி நாடு திரும்பியபோதும், தி ஹன்ட்ரட் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்திலேயே தங்கியுள்ளார் வில்லியம்சன். 
ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக கேன் வில்லியம்சன் ஏப்ரல் மாதம் இந்தியா வந்தார். அப்போதிலிருந்து அவர் பாதுகாப்பு வளயைத்தில்தான் உள்ளார். மே 4-ம் தேதி ஐபிஎல் சீசன் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கைல் ஜேமிசன், மிட்செல் சான்டனர் ஆகியோருடன் மாலத்தீவில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் பங்கேற்பதற்காக மாலத்தீவிலிருந்து நேரடியாக இங்கிலாந்து சென்றார்.   

தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்ற பிறகும், டி20 பிளாஸ்ட் தொடரில் பங்கேற்கும் ஜேமிசன், டெவன் கான்வே மற்றும் காலின் டி கிராண்ட்ஹோம் ஆகியோருடன் இங்கிலாந்திலேயே தங்கியுள்ளார் வில்லியம்சன். காரணம், ஜூலை 21-ம் தேதி தொடங்கும் தி ஹன்ட்ரட் தொடரில் அவர் விளையாடுகிறார்.  

தி ஹன்ட்ரட் தொடர் ஆகஸ்ட் 21-ம் தேதி நிறைவடைந்தவுடன் செப்டம்பர்  மாதம் தொடங்கவுள்ள மீதமுள்ள ஐபிஎல் ஆட்டங்களில் பங்கேற்க அவர் ஐக்கிய அரபு அமீரகம் வரவிருப்பதாகத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து, அக்டோபர் - நவம்பரில் டி20 உலகக் கோப்பை நடைபெறுகிறது. அதுவும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் அவர் நிச்சயம் பங்கேற்பார்.

அதைத் தொடர்ந்து, டிசம்பர் மாதம் இந்தியாவில் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்தை வழிநடத்துகிறார் வில்லியம்சன். 

ஐபிஎல் தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் நீண்ட தனிமைப்படுத்துதலின் இடைவெளிக்குப் பிறகு குடும்பத்தினருடன் இணைந்ததால், வங்கதேசம், மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து விலகிக் கொண்டனர். இதுதவிர மற்ற அணிகளிலிருந்தும் பல்வேறு வீரர்கள் பாதுகாப்பு வளையம் உண்டாக்கும் மனச்சோர்வைக் காரணம் காட்டி வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில் கேன் வில்லியம்சன் எவ்விதப் புகாரும் தெரிவிக்காமல் கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரை தொடர்ந்து பயணத்திலேயே இருந்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.