இங்கிலாந்துடனான 3-வது டி20: டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.


இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி முதலில் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலிரண்டு ஆட்டங்களில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றியது.
இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 ஆட்டம் சௌதாம்ப்டனில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் குசால் பெரேரா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இலங்கை அணியில் ஒஷாடா பெர்னான்டோ, அகிலா தனஞ்ஜெயா ஆகியோருக்குப் பதில் அவிஷ்கா பெர்னான்டோ, லக்ஷன் சன்டாக்கன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து அணியில் மார்க் வுட்டுக்கு ஓய்வளிக்கப்பட்டு கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ஜேசன் ராய் விளையாடவில்லை. அவருக்குப் பதில் மொயீன் அலி களமிறங்குகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...