கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இன்ஸ்டகிராமில் 100 மில்லியன் ரசிகர்கள்: விராட் கோலி சாதனை!

இன்ஸ்டகிராம் தளத்தில் 100 மில்லியன் ரசிகர்களைக் கொண்ட முதல் கிரிக்கெட் வீரர் என்கிற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

News image
Updated On :2 மார்ச் 2021, 5:33 am

DIN

இன்ஸ்டகிராம் தளத்தில் 100 மில்லியன் ரசிகர்களைக் கொண்ட முதல் கிரிக்கெட் வீரர் என்கிற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

பிரபல கால்பந்து வீரர்கள் ரொனால்டோ, நெய்மர், மெஸ்ஸி, ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன், அமெரிக்கப் பாடகி பியான்சே, பாடகியும் நடிகையுமான அரியனா கிராண்ட் ஆகியோரை இன்ஸ்டகிராம் தளத்தில் 100 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள்.

இந்நிலையில் இன்ஸ்டகிராமில் 100 மில்லியன் (10 கோடி) ரசிகர்களைக் கொண்ட முதல் கிரிக்கெட் வீரர் என்கிற பெருமை விராட் கோலிக்குத் தற்போது கிடைத்துள்ளது. இன்ஸ்டகிராமில் அதிகம் பேர் பின்தொடரும் 4-வது விளையாட்டு வீரராகவும் கோலி உள்ளார். 

ரொனால்டோவை 265 மில்லியன் பேரும் மெஸ்ஸியை 186 மில்லியன் பேரும் நெய்மரை 147 மில்லியன் பேரும் இன்ஸ்டகிராம் தளத்தில் பின்தொடர்கிறார்கள்.

சமீபத்தில் இன்ஸ்டகிராமில் 75 மில்லியன் பேர் பின்தொடரும் முதல் ஆசிய வீரர் என்கிற பெருமையை கோலி பெற்றார். தற்போது 100 மில்லியன் என்கிற இலக்கை எட்டியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.