தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர் சஞ்சனா கணேசனைத் திருமணம் செய்கிறாரா பும்ரா?

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளராக மட்டுமல்லாமல் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் தொகுப்பாளராகவும்

News image
Updated On :9 மார்ச் 2021, 9:47 am

DIN

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை கிரிக்கெட் வீரர் பும்ரா திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொந்தக் காரணங்களுக்காக இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் பும்ரா பங்கேற்கவில்லை. அடுத்து நடைபெறவுள்ள டி20 தொடரில் அவர் இடம்பெறவில்லை. பும்ராவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகத் தெரிகிறது. 

ஆரம்பத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரனை பும்ரா திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. எனினும் அனுபமாவின் தாயார் சுனிதா ஒரு பேட்டியில் இதனை மறுத்தார். இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை பும்ரா இந்த வார இறுதியில் திருமணம் செய்யவுள்ளதாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளராக மட்டுமல்லாமல் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் தொகுப்பாளராகவும் சஞ்சனா கணேசன் பணியாற்றி வருகிறார். 

பும்ரா - சஞ்சனா கணேசன் திருமணம் கோவாவில் மார்ச் 14-15 தேதிகளில் நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இதுதொடர்பாக பும்ரா, சஞ்சனா கணேசன் ஆகிய இருவரும் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. 

பும்ராவை சஞ்சனா கணேசன் பேட்டியெடுத்தபோது:
 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.