ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஒருநாள், டி20 அணிகளில் மீண்டும் விளையாடுவது எப்போது?: அஸ்வின் பதில்

2017-க்குப் பிறகு ஒருநாள், டி20 ஆட்டங்களில் அஸ்வின் விளையாடவில்லை.

News image
Updated On :16 மார்ச் 2021, 9:26 am

DIN

ஆர். அஸ்வின், 78 டெஸ்டுகளிலும் 111 ஒருநாள், 46 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

2017-க்குப் பிறகு ஒருநாள், டி20 ஆட்டங்களில் அஸ்வின் விளையாடவில்லை.

இந்நிலையில் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அஸ்வின் கூறியதாவது:

உங்களுடன் நீங்கள் போட்டியிட வேண்டும் என்று சொல்வார்கள். நான் என்னுடன் எப்படிப் போட்டியிட வேண்டும், முழு நிம்மதியுடன் இருக்கவேண்டும் என்பதை அறிந்துள்ளேன். 

ஒருநாள், டி20 ஆட்டங்களுக்கு நான் எப்போது திரும்புவேன் என என்னிடம் கேட்பது நகைப்புக்குரியதாக உள்ளது. என் வாழ்வில் இப்போது நிம்மதியாக, மகிழ்ச்சியாக உள்ளேன். எனக்கு வாய்ப்பு வழங்கப்படும்போது இப்போதுள்ள நிலையில் என்னால் மகத்தான பங்களிப்பை வழங்க முடியும் என நம்புகிறேன். 

மக்களின் கேள்விகளையும் அவர்களுடைய கருத்துகளையும் பற்றி நான் கவலைப்படவில்லை. எப்போது மைதானத்தில் விளையாடும்போதும் என்னிடமும் மற்றவர்களின் முகத்திலும் மகிழ்ச்சியைக் கொண்டு வர விரும்புகிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.