தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாலத்தீவில் ஏப்ரல், மே மாதங்களில் வானிலை அபாரமாக இருக்கும்: பும்ராவுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அறிவுரை!

வாழ்த்துகள். மாலத்தீவில் ஏப்ரல் - மே மாதங்களில் வானிலை நன்றாக இருக்கும் எனக் கேள்விப்பட்டுள்ளோம் என்று கூறியுள்ளது. 

News image
Updated On :16 மார்ச் 2021, 10:56 am

DIN

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர் சஞ்சனா கணேசனைத் திருமணம் செய்த பும்ராவுக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை நேற்று கோவாவில் திருமணம் செய்துள்ளார் பும்ரா. தமிழ்ப் பெண்ணான சஞ்சனா கணேசன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளராக மட்டுமல்லாமல் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். 

பும்ரா - சஞ்சனா கணேசன் திருமணத்துக்கு கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடும் பும்ராவுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் வாழ்த்து தெரிவித்ததாவது:

வாழ்த்துகள். மாலத்தீவில் ஏப்ரல் - மே மாதங்களில் வானிலை நன்றாக இருக்கும் எனக் கேள்விப்பட்டுள்ளோம் என்று கூறியுள்ளது. 

ஐபிஎல் போட்டி ஏப்ரல் 9 அன்று தொடங்கி மே 30-ல் நிறைவுபெறுகிறது. சமீபகாலமாகப் பிரபலங்கள் பலரும் மாலத்தீவுக்குச் சென்று கடற்கரையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இதனால் ஐபிஎல் போட்டி நடைபெறும் ஏப்ரல், மே மாதங்களில் மாலத்தீவுக்குச் செல்லும்படி பும்ராவுக்கு வேடிக்கையான முறையில் வாழ்த்து கூறியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.