47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தோனி சாதனையை முறியடித்தார் ஆப்கானிஸ்தான் கேப்டன்

​இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கார் அப்கான் சனிக்கிழமை முறியடித்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :20 மார்ச் 2021, 2:11 pm

DIN


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கார் அப்கான் சனிக்கிழமை முறியடித்தார்.

ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான 3-வது டி20 ஆட்டம் அபுதாபியில் நடைபெற்றது. இதில் ஆப்கானிஸ்தான் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் கேப்டன் அப்கானின் 42-வது வெற்றி.

இதன்மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன்கள் வரிசையில் தோனியின் 41 வெற்றிகளைத் தாண்டியுள்ளார்.

இந்த வரிசையில் இயான் மார்கன் 33 வெற்றிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் சர்பிராஸ் அகமது 29 வெற்றிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.