இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்: பிசிசிஐ அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
"கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் சுலக்ஷ்னா நாயக் மற்றும் ஆர்பி சிங் ஒருமனதாக ராகுல் டிராவிட்டை தலைமைப் பயிற்சியாளராக புதன்கிழமை நியமித்தனர். நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து டிராவிட் பொறுப்பேற்பார்."
டிராவிட் தலைமை இந்திய கிரிக்கெட்டை புதிய உச்சத்துக்கு எடுத்துச் செல்லும் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிசிசிஐ தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட்டைவிட சிறந்த நபர் எவரும் இருக்க முடியாது என செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...