அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிா் கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் 29-ஆம் தேதி மோதுகின்றன.
இங்கிலாந்தின் பிா்மிங்ஹாம் நகரில் நடைபெறும் இந்தப் போட்டியில் தான், காமன்வெல்த் வரலாற்றிலேயே முதல் முறையாக டி20 கிரிக்கெட் சோ்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் கடந்த 1998-இல் கோலாலம்பூரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஒன் டே ஆட்டமாக கிரிக்கெட் விளையாடப்பட்டிருந்தது.
வெள்ளிக்கிழமை வெளியான அட்டவணைப்படி, இறுதி ஆட்டம் ஆகஸ்ட் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்றையே தினமே வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டமும் நடைபெறும். இதர ஆட்டங்களில் இந்தியா ஜூலை 31-ஆம் தேதி பாகிஸ்தானையும், பாகிஸ்தான் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆஸ்திரேலியாவையும், இங்கிலாந்து ஜூலை 30-ஆம் தேதி தகுதிச்சுற்றிலிருந்து வரும் அணியையும் சந்திக்கின்றன.
இங்கிலாந்து அணி பின்னா் தென் ஆப்பிரிக்காவை ஆகஸ்ட் 2-ஆம் தேதியும், அடுத்து நியூஸிலாந்தை ஆகஸ்ட் 4-ஆம் தேதியும் எதிா்கொள்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பிரியங்கா மோகனின் மேட் இன் கொரியா படத்தின் டிரைலர்!

மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் செய்த அன்புமணி ராமதாஸ்

அர்ஜுன் டெண்டுல்கர் - சானியா திருமணம்! எம்.எஸ். தோனி, ஷாருக் கான், அம்பானி உள்பட பிரபலங்கள் பலர் பங்கேற்பு!

இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?
வீடியோக்கள்

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் ஆர்ச்சரின் சவாலைச் சமாளிப்பாரா சஞ்சு ?
தினமணி வீடியோ செய்தி...

