பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

டி20 தரவரிசை: கேஎல் ராகுல் முன்னேற்றம்

ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய வீரர் கேஎல் ராகுல் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :24 நவம்பர் 2021, 11:28 am

DIN


ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய வீரர் கேஎல் ராகுல் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்திய பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 4-வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 2 ஆட்டங்களில் விளையாடி 80 ரன்கள் எடுத்த ராகுல் 5-வது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் 3 இடங்கள் முன்னேற்றம் கண்டு 10-வது இடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்து டி20 தொடரில் தொடர் நாயகன் வென்ற ரோஹித் சர்மா 2 இடங்களில் முன்னேறி 13-வது இடத்தில் உள்ளார். சூர்யகுமார் யாதவ் 24 இடங்கள் முன்னேறி 59-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

பந்துவீச்சாளர்களில் நியூசிலாந்தின் மிட்செல் சான்ட்னர் 10 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தையும், இந்திய வீரர் புவனேஷ்வர் குமார் 5 இடங்கள் முன்னேறி 19-வது இடத்தையும் பிடித்துள்ளனர். தீபக் சஹார் 19 இடங்கள் முன்னேறி 40-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.