2001 ஆஸி. தொடர் வழியாக என்னை ஊக்கப்படுத்தியவர் ஹர்பஜன்: நன்றி தெரிவிக்கும் அஸ்வின்

டெஸ்ட் தொடரில் ஹர்பஜன் சிங் சிறப்பாகப் பந்துவீசியது தன்னை மிகவும் ஊக்கப்படுத்தியதாக அஸ்வின் கூறியுள்ளார்.
2001 ஆஸி. தொடர் வழியாக என்னை ஊக்கப்படுத்தியவர் ஹர்பஜன்: நன்றி தெரிவிக்கும் அஸ்வின்
Published on
Updated on
1 min read

2001-ல் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹர்பஜன் சிங் சிறப்பாகப் பந்துவீசியது தன்னை மிகவும் ஊக்கப்படுத்தியதாக அஸ்வின் கூறியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 3-வது இந்திய பந்துவீச்சாளர் என்கிற பெருமையைத் தமிழகத்தைச் சேர்ந்த ஆர். அஸ்வின் பெற்றுள்ளார். இதற்கு ஹர்பஜன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தொடக்க வீரர் டாம் லேதமின் விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். இது அவருடைய 418-வது டெஸ்ட் விக்கெட். இதன்மூலம் 417 விக்கெட்டுகள் எடுத்திருந்த ஹர்பஜன் சிங்கைத் தாண்டிச் சென்று, அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த 3-வது இந்திய பந்துவீச்சாளர் என்கிற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார். 80 டெஸ்டுகளில் இந்த இலக்கை அவர் எட்டியுள்ளார். அடுத்ததாக கபில் தேவின் 434 விக்கெட்டுகளைத் தாண்டி விட்டால் 2-வது இடம் கிடைத்து விடும். இச்சாதனையை விரைவில் நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியப் பந்துவீச்சாளர்கள்

619 - அனில் கும்ப்ளே (132 டெஸ்டுகள்)
434 - கபில் தேவ் (131 டெஸ்டுகள்)
419- ஆர். அஸ்வின் (80 டெஸ்டுகள்)
417 - ஹர்பஜன் சிங் (103 டெஸ்டுகள்)

அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த இந்தியப் பந்துவீச்சாளர்களின் பட்டியலில் தன்னை முந்திச் சென்ற அஸ்வினுக்கு ஹர்பஜன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

அஸ்வினுக்கு வாழ்த்துகள். மேலும் பல விக்கெட்டுகளை எடுக்க வாழ்த்துகள் சகோதரரே. கடவுள் அருள் புரியட்டும். சாதனைகள் தொடரட்டும் என்று கூறியுள்ளார். 

இந்நிலையில் ஹர்பஜன் சிங்குக்கு நன்றி தெரிவித்து பிசிசிஐக்கு அளித்த பேட்டியில் அஸ்வின் கூறியதாவது:

இது அபாரமான சாதனை. 2001-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹர்பஜன் சிங் அருமையாகப் பந்துவீசியபோது என்னால் ஆஃப் ஸ்பின்னர் ஆகமுடியும் என்று கூட அந்த நாளில் நினைக்கவில்லை. அவரால் ஊக்கம் கொண்ட நான், ஆஃப் ஸ்பின் வீசுவதற்காகப் பந்தை எடுத்தேன். இப்போது இச்சாதனையைச் செய்துள்ளேன். என்னை ஊக்கப்படுத்தியதற்காக ஹர்பஜன் சிங்குக்கு நன்றி என அஸ்வின் பேட்டியளித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com