தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

இன்னும் அதிக விக்கெட்டுகள் எடுக்க வேண்டும்: அஸ்வினுக்கு ஹர்பஜன் சிங் வாழ்த்து

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 3-வது இந்திய பந்துவீச்சாளர் என்கிற பெருமையைத் தமிழகத்தைச் சேர்ந்த ஆர். அஸ்வின் பெற்றுள்ளார்.

News image
Updated On :30 நவம்பர் 2021, 5:26 am

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 3-வது இந்திய பந்துவீச்சாளர் என்கிற பெருமையைத் தமிழகத்தைச் சேர்ந்த ஆர். அஸ்வின் பெற்றுள்ளார். இதற்கு ஹர்பஜன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தொடக்க வீரர் டாம் லேதமின் விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். இது அவருடைய 418-வது டெஸ்ட் விக்கெட். இதன்மூலம் 417 விக்கெட்டுகள் எடுத்திருந்த ஹர்பஜன் சிங்கைத் தாண்டிச் சென்று, அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த 3-வது இந்திய பந்துவீச்சாளர் என்கிற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார். 80 டெஸ்டுகளில் இந்த இலக்கை அவர் எட்டியுள்ளார். அடுத்ததாக கபில் தேவின் 434 விக்கெட்டுகளைத் தாண்டி விட்டால் 2-வது இடம் கிடைத்து விடும். இச்சாதனையை விரைவில் நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியப் பந்துவீச்சாளர்கள்

619 - அனில் கும்ப்ளே (132 டெஸ்டுகள்)
434 - கபில் தேவ் (131 டெஸ்டுகள்)
419- ஆர். அஸ்வின் (80 டெஸ்டுகள்)
417 - ஹர்பஜன் சிங் (103 டெஸ்டுகள்)

இந்நிலையில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த இந்தியப் பந்துவீச்சாளர்களின் பட்டியலில் தன்னை முந்திச் சென்ற அஸ்வினுக்கு ஹர்பஜன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

அஸ்வினுக்கு வாழ்த்துகள். மேலும் பல விக்கெட்டுகளை எடுக்க வாழ்த்துகள் சகோதரரே. கடவுள் அருள் புரியட்டும். சாதனைகள் தொடரட்டும் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.