ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

டி20 உலகக் கோப்பை பாக். அணியில் ஷோயப் மாலிக்

டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் ஷோயப் மக்சூத்துக்குப் பதில் ஷோயப் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :9 அக்டோபர் 2021, 2:04 pm

DIN


டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் ஷோயப் மக்சூத்துக்குப் பதில் ஷோயப் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஷோயப் மக்சூத் காயம் காரணமாக விலகியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் குழுத் தலைவர் முகமது வாசிம் தனது அறிவிப்பில் இதுபற்றி கூறியிருப்பது:

"அணி நிர்வாகத்திடம் நடத்திய நடத்திய ஆலோசனைகளைத் தொடர்ந்து, மக்சூத் இடத்தில் ஷோயப் மாலிக்கைத் தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. அவரது அனுபவம் ஒட்டுமொத்த அணிக்கும் உதவும்."

டி20 உலகக் கோப்பைக்கான15 வீரர்கள் அடங்கிய பாகிஸ்தான் அணி செப்டம்பர் 6-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 8-ம் தேதி ஆசம் கான் மற்றும் முகமது ஹஸ்னைன் ஆகியோருக்குப் பதில் சர்பிராஸ் அகமது மற்றும் ஹைதர் அலி சேர்க்கப்பட்டனர். அணியில் இடம்பெற்றிருந்த குஷ்தில் ஷாவுக்குப் பதில் தயார் நிலை வீரராக இருந்த ஃபகார் ஸமான் சேர்க்கப்பட்டார். இதன்பிறகு அணியில் மேற்கொள்ளப்படும் 4-வது மாற்றம் இது. 

மாலிக் பாகிஸ்தானுக்காக 116 டி20 ஆட்டங்களில் விளையாடி 2,335 ரன்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.