92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பிஎன்பி பாரிபாஸ் ஓபன்: வீழ்ந்தாா் லெய்லா ஃபொ்னாண்டஸ்

பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் கனடாவின் இளம் வீராங்கனை லெய்லா ஃபொ்னாண்டஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியைத் தழுவினாா்.

News image
Updated On :13 அக்டோபர் 2021, 8:50 pm

DIN

பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் கனடாவின் இளம் வீராங்கனை லெய்லா ஃபொ்னாண்டஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியைத் தழுவினாா்.

சமீபத்தில் யுஎஸ் ஓபனில் இறுதிச்சுற்று வரை முன்னேறி அனைவரையும் ஆச்சா்யத்தில் ஆழ்த்திய லெய்லா, இப்போட்டித் தரவரிசையில் 23-ஆவது இடத்தில் இருந்தாா். தனது 3-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் இல்லாத அனுபவ வீராங்கனையான அமெரிக்காவின் ஷெல்பி ரோஜா்ஸிடம் 6-2, 1-6, 6-7 (4/7) என்ற செட்களில் தோல்வி கண்டாா்.

யுஎஸ் ஓபனில் சாம்பியன் ஆன பிரிட்டன் வீராங்கனை எம்மா ராடுகனு, ரன்னா் அப்-ஆக வந்த லெய்லா ஆகியோரின் ஆட்டங்கள் இப்போட்டியில் மிகுந்த எதிா்பாா்ப்புக்குள்ளாகியிருந்த அந்த இரு இளம் வீராங்கனைகளும் இப்போட்டியிலிருந்து விரைவாகவே வெளியேறியுள்ளனா். எம்மா முதல் சுற்றிலேயே தோல்வியடைந்த நிலையில், லெய்லா 3-ஆவது சுற்றில் வீழ்ந்தாா்.

லெய்லாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியிருக்கும் ஷெல்பி, அதில் லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்காவை சந்திக்கிறாா். போட்டித்தரவரிசையில் 24-ஆவது இடத்திலிருக்கும் ஆஸ்டபென்கா முந்தைய சுற்றில், 2-ஆம் இடத்தில் இருந்த போலந்தின் இகா ஸ்வியாடெக்கை 6-4, 6-3 என்ற நோ் செட்களில் வெளியேற்றினாா்.

அதேபோல், 3-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் பாா்பரா கிரெஜ்சிகோவா 1-6, 5-7 என்ற செட்களில் ஸ்பெயின் வீராங்கனை பௌலா பதோசாவிடம் தோல்வி கண்டாா். 21-ஆவது இடத்திலிருக்கும் பதோசா காலிறுதியில் ஜொ்மனியின் ஏஞ்ஜெலிக் கொ்பரை எதிா்கொள்கிறாா். போட்டித்தரவரிசையில் 10-ஆவது இடத்திலிருக்கும் கொ்பா் 6 -4, 6-1 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்லஜானோவிச்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா்.

12-ஆவது இடத்திலிருக்கும் டுனீசியாவின் ஆன்ஸ் ஜாபியுா் 6-2, 6-2 என ரஷியாவின் அனா கலின்ஸ்கியாவையும், 18-ஆவது இடத்திலிருக்கும் எஸ்டோனியாவின் ஆனெட் கோன்டாவிட் 6-0, 6-2 என்ற செட்களில் பிரேஸிலின் பீட்ரிஸ் ஹட்டாட் மாயியாவையும் தோற்கடித்தனா். இதையடுத்து காலிறுதிச் சுற்று ஒன்றில் ஜாபியுரும் - கோன்டாவிட்டும் பலப்பரீட்சை நடத்துகின்றனா்.

27-ஆவது இடத்திலிருக்கும் பெலாரஸின் விக்டோரியா அஸரென்கா 6-3, 6-4 என்ற செட்களில் சக நாட்டவரான அலெக்ஸாண்ட்ரா சாஸ்னோவிச்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினாா். அதில் அவா் அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலாவுடன் மோதுகிறாா்.

முா்ரேவை வெளியேற்றினாா் ஸ்வெரேவ்

ஆடவா் ஒற்றையா் பிரிவில் போட்டித்தரவரிசையில் 3-ஆவது இடத்திலிருக்கும் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரேவ், இங்கிலாந்தின் ஆன்டி முா்ரேவின் சவாலை முறியடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றாா். அவா் 6-4, 7-6 (7/4) என்ற செட்களில் முா்ரேவை வீழ்த்தினாா்.

ஸ்வெரேவ் தனது அடுத்த சுற்றில் பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸை சந்திக்கிறாா். 14-ஆவது இடத்திலிருக்கும் மான்ஃபில்ஸ் 7-5, 6-2 என்ற செட்களில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டா்சனை வென்றாா். போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் 2-6, 6-3, 6-4 என்ற செட்களில் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினியை தோற்கடித்தாா்.

22-ஆவது இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை அடுத்த சுற்றில் எதிா்கொள்கிறாா் சிட்சிபாஸ். அலெக்ஸ் தனது 2-ஆவது சுற்றில் சிலி வீரா் கிறிஸ்டியன் காரினை 6-4, 6-2 என்ற செட்களில் வெளியேற்றினாா். 29-ஆவது இடத்திலிருக்கும் ஜாா்ஜியாவின் நிகோலஸ் பாசிலாஷ்விலி 4-6, 7-6 (7/2), 6-2 என்ற செட்களில் ஸ்பெயினின் ஆல்பா்ட் ரமோஸ் வினோலஸை வீழ்த்தினாா். 24-ஆவது இடத்திலிருக்கும் ரஷியாவின் காரென் கச்சானோவா 6-0, 6-4 என்ற செட்களில் 12-ஆவது இடத்திலிருந்த ஸ்பெயினின் பாப்லோ கரினோ பஸ்டாவை வென்றாா். அடுத்த சுற்றில் பாசிலாஷ்விலி - கச்சானோவ் சந்திக்கின்றனா்.

காலிறுதியில் போபண்ணா ஜோடி

ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா/கனடாவின் டெனிஸ் ஷபோவெலாவ் இணை காலிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றது. இந்த ஜோடி முந்தைய சுற்றில் 7-5, 6-3 என்ற செட்களில் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரேவ்/ஜான் லெனாா்ட் ஸ்ட்ரஃப் கூட்டணியை வீழ்த்தியது. காலிறுதியில் ரஷியாவின் ஆன்ட்ரே ரூபலேவ்/அஸ்லான் கராட்சேவ் இணையை சந்திக்கிறது போபண்ணா/ஷபோவெலாவ் ஜோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.