சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

டெஸ்ட் தரவரிசை: முதல்முறையாக 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ள ரோஹித் சர்மா

டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல்முறையாக 5-வது இடத்தைப் பிடித்துள்ளார் ரோஹித் சர்மா.

News image
Updated On :1 செப்டம்பர் 2021, 9:18 am

DIN

டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல்முறையாக 5-ம் இடத்தைப் பிடித்துள்ளார் ரோஹித் சர்மா.

பிரபல வீரரான ரோஹித் சர்மா இதுவரை 42 டெஸ்டுகளில் விளையாடி 2909 ரன்கள் எடுத்துள்ளார். 7 சதங்களும் 14 அரை சதங்களும் எடுத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 36, 12*, 83, 21, 19, 59 என ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடி வருகிறார்.

இதையடுத்து டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல்முறையாக 5-ம் இடத்தைப் பிடித்துள்ளார் ரோஹித் சர்மா. 2019 அக்டோபரில் 54-வது இடத்தில் இருந்த ரோஹித் சர்மா, தொடர்ந்து ரன்கள் குவித்து தற்போது 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். மேலும் இந்திய வீரர்களில் அதிகப் புள்ளிகளுடன் தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் உள்ள ஒரே இந்திய வீரரும் ரோஹித் சர்மா தான். கோலி 6-ம் இடத்தில் உள்ளார்.

டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தில் ஜோ ரூட்டும் அடுத்த மூன்று இடங்களில் கேன் வில்லியம்சன், ஸ்மித், மார்னஸ் ஆகியோரும் உள்ளார்கள்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.