அஸ்வினுக்கு மீண்டும் ஏமாற்றம்: விமர்சனத்துக்கு ஆளாகியுள்ள விராட் கோலியின் முடிவு

சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஓவல் மைதானத்திலும் அஸ்வின் தேர்வு செய்யப்படாததால் அதிக விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்...
அஸ்வினுக்கு மீண்டும் ஏமாற்றம்: விமர்சனத்துக்கு ஆளாகியுள்ள விராட் கோலியின் முடிவு
Published on
Updated on
3 min read

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் அஸ்வின் மீண்டும் சேர்க்கப்படாததற்கு விராட் கோலி அதிக விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டிலும் அஸ்வினைத் தேர்வு செய்யாததற்கு இந்திய கேப்டன் விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. 3 டெஸ்டுகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. நான்காவது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் இஷாந்த் சர்மா, ஷமிக்குப் பதிலாக உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்குர் இடம்பெற்றுள்ளார்கள். இந்த டெஸ்டிலும் அஸ்வினுக்கு இடம் கிடைக்கவில்லை. இங்கிலாந்து அணியில் பட்லர், சாம் கரணுக்குப் பதிலாக போப், வோக்ஸ் இடம்பெற்றுள்ளார்கள். 

டாஸ் நிகழ்வின்போது அஸ்வினைத் தேர்வு செய்யாதது பற்றி கோலியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்: 

இங்கிலாந்து அணியில் நான்கு இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளார்கள். எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் ஓவர் தி விக்கெட்டிலிருந்து பந்துவீசுவதால் அது ஜடேஜாவின் பந்துவீச்சுக்குப் பொருத்தமாக இருக்கும் என்றார். 

வழக்கமாக ஓர் அணியில் இடது கை பேட்ஸ்மேன்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் ஆஃப் ஸ்பின்னர்களைச் சேர்ப்பார்கள். இடது கை சுழற்பந்து வீச்சாளர்களைத் தவிர்ப்பார்கள். ஆனால் இதற்கு நேர்மாறாக கோலி விளக்கம் அளித்துள்ளது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. 

இந்நிலையில் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஓவல் மைதானத்திலும் அஸ்வின் தேர்வு செய்யப்படாததால் அதிக விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் சிறப்பாகப் பந்துவீசிய அஸ்வின், இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றார். இருந்தும் இங்கிலாந்தில் தொடர்ந்து நான்கு டெஸ்டுகளில் தேர்வு செய்யாததைக் கண்டு பலரும் ஏமாற்றமடைந்துள்ளார்கள். கோலி தவறான முடிவை எடுத்துள்ளார், அஸ்வினை இன்னும் மரியாதையாக நடத்தவேண்டும் என ரசிகர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் முன்னாள் வீரர்களும் அஸ்வினுக்கு ஆதரவாகச் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் எழுதியுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com