
4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற 368 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து, 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் ஒருசில வீரர்களை தவிர அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்திய அணி 148.2 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 466 ரன்கள் குவித்தது.
இதையும் படிக்க- வண்ணமயமாக நிறைவு பெற்றது டோக்கியோ பாராலிம்பிக்
இதன்மூலம் இங்கிலாந்துக்கு 368 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. அதிகபட்சமாக இந்திய அணியில் ரோஹித் சர்மா 127, புஜாரா 61, ரிஷப் பந்த் 50, ஷர்துல் 60 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ் 3, ராபின்சன், மொயில் அலி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.