சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

ஐசிசியின் ஆகஸ்ட் மாதத்துக்கான சிறந்த வீரராக ஜோ ரூட் தேர்வு

ஐசிசியின் ஆகஸ்ட் மாதத்துக்கான சிறந்த வீரராக இங்கிலாந்தின் ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

News image
Updated On :13 செப்டம்பர் 2021, 1:03 pm

DIN

ஐசிசியின் ஆகஸ்ட் மாதத்துக்கான சிறந்த வீரராக இங்கிலாந்தின் ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

மாதத்தின் சிறந்த வீரா்/வீராங்கனை என்கிற பெயரில் புதிய விருதை அறிமுகம் செய்துள்ளது ஐசிசி. சா்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகை போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்படும் வீரா், வீராங்கனைகளை ஆண்டு முழுவதுமாக அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படவுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. தங்களுக்கு விருப்பமான வீரா், வீராங்கனைகளுக்கு அந்த விருது கிடைக்கச் செய்யும் வகையில் ரசிகா்கள் ஆன்லைன் மூலமாக வாக்குகளை செலுத்தலாம். முன்னாள் வீரா்கள், ஒளிபரப்பு நிறுவனங்கள், பத்திரிகையாளா்கள் ஆகியோா் அடங்கிய ஐசிசியின் வாக்கு செலுத்துதல் அகாதெமியும், ரசிகா்களுடன் இதில் இணைந்து செயல்படுவார்கள். விருதுக்கு தகுதியான நபா்கள், களத்தில் செயல்பட்டது, சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் வெளிப்படுத்திய ஆட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ஐசிசியின் விருதுகள் பரிந்துரை குழுவால் தீா்மானிக்கப்படுவாா்கள் என ஐசிசி தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த வீரர், வீராங்கனைக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. மகளிர் பிரிவில் கேபி லூயிஸ், எமியர் ரிச்சர்ட்சன், நடாயா ஆகியோரும் ஆடவர் பிரிவில் ஜோ ரூட், பும்ரா, ஷாஹீன் அப்ரிடி ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டார்கள். 

இந்நிலையில் இங்கிலாந்தின் ஜோர் ரூட் சிறந்த வீரராகவும் அயர்லாந்து ஆல்ரவுண்டர் எமியர் சிறந்த வீராங்கனையாகவும் தேர்வாகியுள்ளார்கள். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 64, 109, 180*, 33, 121, 21, 36 என அற்புதமாக விளையாடினார் ஜோ ரூட். அதனால் ஆகஸ்ட் மாதத்துக்கான சிறந்த வீரராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.