சர்வதேச கிரிக்கெட்டில் இனி இதைப் பார்க்க முடியாது! (விடியோ)

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஜிம்பாப்வே வீரர் பிரெண்டன் டெய்லர் ஓய்வு பெற்றதனால், அவருக்கே உரித்தான பிரத்யேக 'அப்பர் கட்' போன்ற ஷாட்டை இனி சர்வதேச கிரிக்கெட்டில் பார்க்க முடியாது.
படம்: விடியோவிலிருந்து எடுக்கப்பட்டது
படம்: விடியோவிலிருந்து எடுக்கப்பட்டது
Published on
Updated on
1 min read


சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஜிம்பாப்வே வீரர் பிரெண்டன் டெய்லர் ஓய்வு பெற்றதனால், அவருக்கே உரித்தான பிரத்யேக 'அப்பர் கட்' போன்ற ஷாட்டை இனி சர்வதேச கிரிக்கெட்டில் பார்க்க முடியாது.

சர்வதேச கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே பெரிதளவில் ஆதிக்கம் செலுத்தாத அணியாக இருந்தாலும், அவ்வப்போது சில மகத்தான வீரர்களை கிரிக்கெட்டுக்கு வழங்கும். அப்படிப்பட்ட வீரர்களுள் ஒருவர்தான் பிரெண்டன் டெய்லர்.

ஜிம்பாப்வே அணிக்காக 2004-இல் அறிமுகமான அவர், 284 சர்வதேச ஆட்டங்களில் விளையாடியுள்ளார். அதிகபட்சமாக 205 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியிருக்கிறார். அயர்லாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்துடன் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை முடித்துக்கொண்டார் டெய்லர்.

'ஷார்ட் பிட்ச்' பந்துகளை பார்ப்பதற்கு அழகான முறையிலும், கச்சிதமாகவும் 'அப்பர் கட்' மூலம் பவுண்டரிக்கு விரட்டுவதில் டெய்லர் வல்லவர். டெய்லர் ஓய்வு பெற்றதன் மூலம் அவருடைய பிரத்யேகமான 'அப்பர் கட்' போன்ற ஷாட்டை இனி சர்வதேச கிரிக்கெட்டில் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விடியோ: 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com