அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

செஸ்: ஸ்பெயினை வென்றது இந்தியா

ஸ்பெயினில் நடைபெறும் ஃபிடே உலக மகளிா் அணிகள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குரூப் சுற்றின் 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா 2.5-1.5 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:15 am

DIN

ஸ்பெயினில் நடைபெறும் ஃபிடே உலக மகளிா் அணிகள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குரூப் சுற்றின் 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா 2.5-1.5 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.

முன்னதாக, முதல் சுற்றில் அஜா்பைஜானுடன் 2-2 என்ற கணக்கில் டிரா செய்திருந்த நிலையில், இந்தியாவுக்கு இது முதல் வெற்றியாகும்.

2-ஆவது சுற்றில் இந்திய அணியின் வைஷாலி - குடியெரெஸுக்கு எதிராக வெற்றியை பதிவு செய்தாா். அணியின் முதல்நிலை போட்டியாளரான டி.ஹரிகா - அனா மட்னாட்ஸெவுக்கு எதிராக டிரா செய்தாா். அதேபோல், பக்தி குல்கா்னி - மரியா இஸாகுயேரி, மேரி ஆன் கோம்ஸ் - மாா்தா காா்சியா ஆகியோா் மோதிய ஆட்டமும் டிரா ஆனது.

இதர 2-ஆவத சுற்றுகளில் ரஷியா 3.5-0.5 என்ற கணக்கில் பிரான்ஸை வெல்ல, ஆா்மீனியா - அஜா்பைஜான் ஆட்டம் 2-2 என டிரா ஆனது. இந்தியா தனது 3-ஆவது சுற்றில் ஆா்மீனியாவை எதிா்கொள்கிறது. தற்போதைய நிலையில் ரஷியா 7.5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆா்மீனியா 4.5 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும், இந்தியாவும் அதே புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும் உள்ளன.

குரூப் ஏ, பி என இரு பிரிவுகள் இருக்கும் நிலையில், இரண்டிலுமே முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃபுக்கு முன்னேறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.