அஸ்வின் சேர்க்கப்படவில்லையா..? ட்விட்டரில் குவியும் எதிர்ப்புகள்

​இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படாததற்கு ட்விட்டரில் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்


இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படாததற்கு ட்விட்டரில் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் டிரென்ட் பிரிட்ஜில் இன்று (புதன்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. சுழற்பந்துவீச்சாளராக ரவீந்திர ஜடேஜா மட்டுமே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வேகப்பந்துவீச்சாளர்கள் ஜாஸ்பிரீத் பூம்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர் என 4 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் அஸ்வின் சேர்க்கப்படாததற்கு ட்விட்டரில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்குப் பிறகு, டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியுடன் இணையும் முன் அஸ்வின் கவுன்டி கிரிக்கெட்டில் ஒரு ஆட்டம் விளையாடினார். இதில் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாகப் பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ரசிகர்கள் குறிப்பாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதைக் குறிப்பிட்டு விமரிசித்து வருகின்றனர்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து நாடுகளில் விளையாடும்போது ஒரேயொரு சுழற்பந்துவீச்சாளரைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற சூழலில் பேட்டிங்கையும் கருத்தில்கொண்டு அஸ்வினுக்குப் பதில் ஜடேஜாவையே இந்திய அணி இதற்கு முன்பு தேர்வு செய்திருக்கிறது. இதனையும் குறிப்பிட்டு ஒவ்வொரு முறையும் அஸ்வினே பலிகடா ஆக வேண்டுமா என்ற விமரிசனத்தையும் ரசிகர்கள் முன்வைத்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com