என்ன ஆச்சு ஆஸி. அணிக்கு?: டி20 தொடரில் வங்கதேசத்திடம் தோற்கப் போகிறதா?

டெஸ்டில் மட்டுமல்ல டி20 தொடர்களிலும் அதிர்ச்சியான தோல்விகளைச் சந்தித்து வருகிறது ஆஸ்திரேலிய அணி. 
ஆஸி. பந்துவீச்சாளர் ஹேசில்வுட்
ஆஸி. பந்துவீச்சாளர் ஹேசில்வுட்

டெஸ்டில் மட்டுமல்ல டி20 தொடர்களிலும் அதிர்ச்சியான தோல்விகளைச் சந்தித்து வருகிறது ஆஸ்திரேலிய அணி. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் வங்கதேசம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது அந்த அணி.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய வங்கதேசம் 18.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்து வென்றது. அந்த அணியின் அஃபிஃப் ஹுசைன் ஆட்டநாயகன் ஆனாா்.

இதுவரை எந்தவொரு தொடரிலும் ஆஸ்திரேலியாவை வங்கதேசம் வென்றதில்லை. இதனால் முதல்முறையாக ஆஸி. அணியை வீழ்த்த துடித்துக் கொண்டிருக்கிறார்கள் வங்கதேச வீரர்கள். மேலும் டி20 தொடரில் முதல்முறையாக வங்கதேசத்துடன் மோதுகிறது ஆஸ்திரேலியா. இதற்கு முன்பு நான்கு முறை டி20 உலகக் கோப்பையில் மட்டுமே இரு அணிகளும் மோதியுள்ளன. 

மிட்செல் மார்ஷ் தவிர வேறு எந்த ஆஸி. வீரரும் நன்கு விளையாடாதது பெரிய பலவீனமாக உள்ளது. 20 ஓவர்கள் முழுமையாக விளையாடி எடுத்த மூன்று குறைந்த ஸ்கோர்களில் இரண்டு ஸ்கோர்களை இந்தத் தொடரில் எடுத்துள்ளது ஆஸ்திரேலியா. முதல் டி20யில் 108 ரன்களும் 2-வது டி20யில் 121/7 ரன்களும் எடுத்துள்ளது. இதனால் வங்கதேசத்துக்கு எதிரான தொடரை வெல்வது பேட்ஸ்மேன்களின் கையில் தான் உள்ளது. (இந்தத் தொடரில் பிரபல ஆஸி. வீரர்களான டேவிட் வார்னர், ஆரோன் ஃபிஞ்ச், ஸ்டீஸ் ஸ்மித் போன்றோர் கலந்துகொள்ளவில்லை)

சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 1-4 எனத் தோற்றது ஆஸ்திரேலியா. அடுத்ததாக வங்கதேசத்திடமும் தோல்வியைத் தழுவினால் அது மிகப்பெரிய அவமானமாக இருக்கும். அடுத்து வருகிற டி20 உலகக் கோப்பையில் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும். மிகப்பெரிய சரிவிலிருந்து மீளுமா ஆஸ்திரேலியா?

3-வது டி20 ஆட்டம் நாளை நடைபெறுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com