ஜூலை மாத சிறந்த வீரர்கள் பெயரைப் பரிந்துரைத்தது ஐசிசி
By DIN | Published On : 08th August 2021 04:31 PM | Last Updated : 08th August 2021 05:13 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
ஜூலை மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்கள் பெயரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பரிந்துரைத்துள்ளது.
ஆடவர் கிரிக்கெட்டில் வங்கதேசத்திலிருந்து ஷகிப் அல் ஹசன், ஆஸ்திரேலியாவிலிருந்து மிட்செல் மார்ஷ் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து ஹேடன் வால்ஷ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். மகளிர் கிரிக்கெட்டிலிருந்து ஹேலே மேத்யூஸ் (மேற்கிந்தியத் தீவுகள்), ஃபாதிமா சனா (பாகிஸ்தான்) மற்றும் ஸ்டெஃபானி டெய்லர் (மேற்கிந்தியத் தீவுகள்) ஆகியோர் ஐசிசியால் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | டி20: ஆஸி.க்கு முதல் வெற்றி
ஜிம்பாப்வேவுக்கு எதிரான அனைத்து தொடர்களிலும் விளையாடிய ஷகிப் அல் ஹசன், ஒருநாள் மற்றும் டி20 ஆட்டங்களில் வெற்றிக்குப் பங்காற்றியுள்ளார். மிட்செல் மார்ஷ் கடந்த மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியுள்ளார். டி20 தொடரில் 219 ரன்கள் குவித்தும், 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தியும் அசத்தியுள்ளார். ஹேடன் வால்ஷ் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்றார். ஒருநாள் தொடரில் 7 விக்கெட்டுகளும், டி20 தொடரில் 12 விக்கெட்டுகளும் வீழ்த்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இவர்களுள் யார் வெற்றியாளர்கள் என்பது அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளது.