தொடரும் தடுமாற்றம்: கடந்த 10 இன்னிங்ஸில் ஓர் அரை சதமும் எடுக்காத புஜாரா!

3-ம் நிலை வீரராகக் களமிறங்கும் ஒருவர் இப்படி ஆடினால் இந்திய அணி என்ன செய்யும்?
தொடரும் தடுமாற்றம்: கடந்த 10 இன்னிங்ஸில் ஓர் அரை சதமும் எடுக்காத புஜாரா!

புஜாரா இந்திய அணியின் தடுப்புச் சுவராக வர்ணிக்கப்படுகிறவர்.

2018-ல் ஆஸ்திரேலியாவில் எக்கச்சக்க ரன்கள் குவித்து இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்லக் காரணமாக இருந்தார்.

அதன்பிறகு அவருடைய ஆட்டம் மெச்சும்படி இல்லை. ஒவ்வொருமுறையும் அவர் மீதான எதிர்பார்ப்பு பொய்த்துப் போகிறது.

அதிலும் கடந்த 10 இன்னிங்ஸில் ஓர் அரை சதமும் எடுக்கவில்லை.

3-ம் நிலை வீரராகக் களமிறங்கும் ஒருவர் இப்படி ஆடினால் இந்திய அணி என்ன செய்யும்?

33 வயது புஜாரா, இந்திய அணிக்காக 87 டெஸ்டுகள், 5 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். எப்போதும் இந்திய அணிக்குத் தவறாமல் ரன்கள் வழங்கி வரும் புஜாரா சமீபகாலமாகச் சொதப்பி வருகிறார். வந்த வேகத்தில் ஓய்வறைக்குத் திரும்புகிறார். இதனால் இந்திய அணிக்குச் சிக்கலை ஏற்படுத்தி வருகிறார். 

2018-ல் ஆஸ்திரேலியா அவர் எடுத்த ரன்கள்

123, 71, 24,4, 106,0, 193.

ஆனால் சமீபத்திய ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்தில் ஓரளவு தான் நன்றாக விளையாடினார். 

43,0, 17,3, 50,77, 25,56

சமீபத்தில் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகளில் விளையாடியது இங்கிலாந்து அணி. இங்கிருந்துதான் மோசமாக விளையாட ஆரம்பித்தார் புஜாரா. அது இன்று வரை தொடர்கிறது. சென்னை முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 73 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு தான் புஜாராவை வீழ்த்துவது பந்துவீச்சாளர்களுக்கு எளிதாக இருக்க ஆரம்பித்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றிலும் 8, 15 ரன்கள் தான் எடுத்தார். இப்போது இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 4, 12 ரன்களில் ஆட்டமிழந்தவர் லார்ட்ஸ் டெஸ்டில் நேற்று 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து இந்திய ரசிகர்களுக்கு மேலும் ஏமாற்றம் அளித்தார். 

கடந்த 10 இன்னிங்ஸில் புஜாரா எடுத்த ரன்கள்

9
12*
4
15
8
17
0
7
21
15
73

இதற்கு மேலும் இந்திய அணி புஜாராவுக்கு இன்னொரு வாய்ப்பு தருமா? 2-வது இன்னிங்ஸில் புஜாரா ரன்கள் எடுக்காவிட்டால் அடுத்த டெஸ்டில் இடம் கிடைப்பது கடினம் தான். அவருக்குப் பதிலாக விஹாரியைக் களமிறக்கவே இந்திய அணி விருப்பப்படும். என்ன செய்யப்போகிறார் புஜாரா? தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com