ஐபிஎல் அணிகள் தக்கவைக்காத பிரபல வீரர்கள்

டு பிளெஸ்சிஸ், பிராவோ, சுரேஷ் ரெய்னா, உத்தப்பா, தீபக் சஹார், ஷர்துல் தாக்குர், ஹேசில்வுட் ஆகிய முக்கிய வீரர்களை சிஎஸ்கே அணியால்...
தினேஷ் கார்த்திக் -
தினேஷ் கார்த்திக் -

ஐபிஎல் போட்டியில் எதிா்வரும் பருவத்துக்கான ஏலம் நெருங்கி வரும் நிலையில், அணிகள் தக்க வைத்துக் கொண்ட வீரா்களின் பட்டியல் நேற்று வெளியானது. 

சிஎஸ்கே அணியில் ஜடேஜா, தோனி, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட் போன்றோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். 

தக்கவைக்கப்பட்ட வீரா்கள் பட்டியல்

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சா்மா (ரூ. 16 கோடி), பும்ரா (ரூ. 12 கோடி), சூா்யகுமாா் யாதவ் (ரூ. 8 கோடி), பொலாா்ட் (ரூ. 6 கோடி).

சென்னை சூப்பா் கிங்ஸ்: ரவீந்திர ஜடேஜா (ரூ. 16 கோடி), எம்.எஸ்.தோனி (ரூ. 12 கோடி), மொயீன் அலி (ரூ. 8 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (ரூ. 6 கோடி).

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூா்: விராட் கோலி (ரூ. 15 கோடி), கிளென் மேக்ஸ்வெல் (ரூ. 11 கோடி), முகமது சிராஜ் (ரூ. 7 கோடி).

பஞ்சாப் கிங்ஸ்: மயங்க் அகா்வால் (ரூ. 12 கோடி - அணியின் நிதியிலிருந்து ரூ. 14 கோடி எடுக்கப்படும்), அா்ஷ்தீப் சிங் (ரூ. 4 கோடி).

சன்ரைசா்ஸ் ஹைதராபாத்: கேன் வில்லியம்சன் (ரூ. 14 கோடி), அப்துல் சமத் (ரூ. 4 கோடி), உம்ரான் மாலிக் (ரூ. 4 கோடி).

ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (ரூ. 14 கோடி), பட்லா் (ரூ. 10 கோடி), ஜெய்ஸ்வால் (ரூ. 4 கோடி).

கொல்கத்தா நைட் ரைடா்ஸ்: ஆண்ட்ரே ரஸ்ஸல் (ரூ. 12 கோடி - அணியின் நிதியிலிருந்து ரூ. 16 கோடி எடுக்கப்படும்), வருண் சக்ரவா்த்தி (ரூ. 8 கோடி - அணியின் நிதியிலிருந்து ரூ. 12 கோடி எடுக்கப்படும்), வெங்கடேஷ் ஐயா் (ரூ. 8 கோடி), சுனில் நரைன் (ரூ. 6 கோடி).

ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் முதல் லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. இதில் லக்னௌ அணியை, கொல்கத்தாவைச் சோ்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்காவின் ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ரூ. 7,090 கோடிக்கு வாங்கியுள்ளது. ஆமதாபாத் அணியைச் சா்வதேசப் பங்கு முதலீட்டு நிறுவனமான சிவிசி கேபிடல் ரூ. 5,600 கோடிக்குச் சொந்தமாக்கியுள்ளது. ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ஏற்கெனவே கடந்த 2016-17 காலகட்டத்தில் ரைசிங் புணே சூப்பா் ஜெயன்ட் அணி உரிமையாளராக இருந்தது.

ஐபிஎல் 2022 போட்டியில் விளையாடும் வீரர்களுக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காக வீரர்களைத் தக்கவைக்கும் பட்டியல் வெளியாகியுள்ளது. 

கே.எல். ராகுல் - மார்கன்
கே.எல். ராகுல் - மார்கன்

பழைய 8 அணிகளும் 4 வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளன. ஏலத்துக்கு முன்பு உள்ள வீரர்களின் பட்டியலில் இருந்து 3 வீரர்களைத் தேர்வு செய்துகொள்ள இரு புதிய அணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 8 அணிகள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளதால் இதன்பிறகு மீதமுள்ள வீரர்களில் இருந்து இரு புதிய அணிகளும் தலா மூன்று வீரர்களைத் தேர்வு செய்து கொள்ளலாம். இந்தப் பணி டிசம்பர் 25-க்குள் முடிவடையவேண்டும். 

இந்நிலையில் 4 பேரை மட்டும் தக்கவைக்க வேண்டும் என்பதால் பல பிரபல வீரர்களைத் தக்கவைக்க முடியாத நிலை அணிகளுக்கு ஏற்பட்டுள்ளது. 2021 ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 2-ம் இடம் பிடித்த  டு பிளெஸ்சிஸ், பிராவோ, சுரேஷ் ரெய்னா, உத்தப்பா, தீபக் சஹார், ஷர்துல் தாக்குர், ஹேசில்வுட் ஆகிய முக்கிய வீரர்களை சிஎஸ்கே அணியால் தக்கவைக்க முடியவில்லை. இதே நிலை தான் இதர அணிகளுக்கும். இதில் சில வீரர்கள் ஏலத்தில் பங்குபெற விருப்பம் தெரிவித்ததாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் அணிகள் தக்கவைக்காத பிரபல வீரர்கள்

சென்னை:  டு பிளெஸ்சிஸ், பிராவோ, சுரேஷ் ரெய்னா, உத்தப்பா, தீபக் சஹார், ஷர்துல் தாக்குர், ஹேசில்வுட்
கொல்கத்தா: மார்கன், ஷுப்மன் கில், ஃபெர்குசன், நிதிஷ் ராணா
பெங்களூர்: படிக்கல், சஹால், ஹர்ஷல் படேல், வாஷிங்டன் சுந்தர்
தில்லி: ஷ்ரேயஸ் ஐயர், அஸ்வின், அவேஷ் கான், ரபாடா
மும்பை: பாண்டியா, இஷான் கிஷன், டிரெண்ட் போல்ட், ராகுல் சஹார்
ஹைதராபாத்: வார்னர், ரஷித் கான், பேர்ஸ்டோ, மனிஷ் பாண்டே
ராஜஸ்தான்: பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், டேவிட் மில்லர், கிறிஸ் மாரிஸ், லியம் லிவிங்ஸ்டன்
பஞ்சாப்: கே.எல். ராகுல், கிறிஸ் கெயில், ரவி பிஷ்னாய், நிகோல்ஸ் பூரன், ஷாருக் கான்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com