சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

உலக செஸ் சாம்பியன்ஷிப்: பிறந்த நாளன்று 4-வது ஆட்டத்தை டிரா செய்த கார்ல்சன்

நடப்பு உலக சாம்பியன் கார்ல்சன் - ரஷியாவைச் சேர்ந்த இயன் நிபோம்நிஷி ஆகியோருக்கிடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி...

News image
Updated On :1 டிசம்பர் 2021, 6:02 am

துபையில் நடைபெற்றும் வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 4-வது ஆட்டமும் டிராவில் முடிவடைந்தது.

நடப்பு உலக சாம்பியன் கார்ல்சன் - ரஷியாவைச் சேர்ந்த இயன் நிபோம்நிஷி ஆகியோருக்கிடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி துபையில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் வெல்லும் வீரர் உலக சாம்பியனாக பட்டம் சூட்டப்படுவார். கேண்டிடேட்ஸ் போட்டியை வென்றதன் மூலம் இப்போட்டியில் விளையாட இயன் நிபோம்நிஷி தகுதி பெற்றார். 

முதல் 3 ஆட்டங்களும் டிரா ஆன நிலையில் 4-ம் ஆட்டம் நேற்று நடைபெற்றது. கார்ல்சன் வெள்ளை நிற காய்களுடனும் நிபோம்நிஷி கருப்பு நிற காய்களுடனும் விளையாடினார்கள். நேற்று கார்ல்சனின் 31-வது பிறந்த நாள் என்பதால் வெற்றியை ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். எனினும் இரு தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி 4-வது ஆட்டமும் டிராவில் முடிவடைந்தது. நேற்றைய ஆட்டம் 33 நகர்த்தல் வரை சென்றது. 2 மணி நேரம் 37 நிமிடங்கள் நடைபெற்றது. 

மொத்தம் 14 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் இதுவரை கார்ல்சன், நிபோம்நிஷி ஆகிய இருவரும் தலா 2 புள்ளிகளை எடுத்துள்ளார்கள். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.