சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் விருதான பேலன் தோர் (Ballon d'Or) விருதை 7-வது முறையாக லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார்.
பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளிவரும் பிரான்ஸ் ஃபுட்பால் என்கிற பத்திரிகை சார்பில் 1956 முதல் ஆண்டுதோறும் பேலன் தோர் விருது வழங்கப்படுகிறது. பல்வேறு தரப்பினரிடம் நடத்தப்படும் வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த விருதுக்குரியவர் தேர்வு செய்யப்படுகிறார். 2021-ம் ஆண்டுக்கான பேலன் தோர் விருது மெஸ்ஸிக்குக் கிடைத்துள்ளது.
2009, 2010, 2011, 2012, 2015, 2019, 2021 என 7 ஆண்டுகளில் இவ்விருதை மெஸ்ஸி வென்றுள்ளார். போலந்து நாட்டைச் சேர்ந்த ராபர்ட் லிவான்டாவ்ஸ்கியைத் தோற்கடித்து இவ்விருதை அவர் கைப்பற்றியுள்ளார். மகளிருக்கான பேலன் தோர் விருதை ஸ்பெயினின் அலெக்ஸியா வென்றுள்ளார்.
சமீபத்தில் பார்சிலோனா அணியிலிருந்து விலகிய மெஸ்ஸி, பாரீஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் கிளப்பில் இணைந்தார்.

மனைவி, மகன்களுடன் மெஸ்ஸி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிவகங்கை! திமுகவின் கெளரவப் பிரச்னையான தொகுதி!

ராஜபாளையம்! வெற்றியை தீர்மானிக்கும் நடுநிலை வாக்காளர்கள்!

அஸ்ஸாம் முதல்வர் மனைவிக்கு துபையில் சொத்துகள்: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

தொகுதி அலசல் - கவுண்டம்பாளையம்! வலுவான அதிமுகவை எதிர்கொள்ளும் காங்கிரஸ்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


