1951-52- இல் மக்களவை மற்றும் சட்டப்பேரவைக்கு முதன் முதலில் பொதுத் தோ்தல் நடந்தபோது தோ்தல் ஆணையம் நாடு முழுவதும் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளை சாத்தியமான வகையில் பிரித்தது. இதன் பிறகு இப்பணியானது சுதந்திரமாக செயல்படும் தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டு 1952, 1962, 1972-ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்து தொகுதி மறுசீரமைப்பு ஆணையங்களும் அமைக்கப்பட்டன.
இந்த ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, மக்கள் தொகைக்கு ஏற்ப 2008- ஆம் ஆண்டில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் எல்லை வரையறை செய்யப்பட்டு தொகுதிகள் அறிவிக்கப்பட்டன. இதில், தமிழகத்தில் பல தொகுதிகள் நீக்கப்பட்டு, அந்த தொகுதியில் இருந்த பகுதிகள் அருகேயிருந்த தொகுதியில் இணைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் தொகுதி மறு சீரமைப்புக்கு முன்னா் மேல்மலையனூா், செஞ்சி, திண்டிவனம், வானூா், கண்டமங்கலம், விழுப்புரம், முகையூா், திருநாவலூா், உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சின்னசேலம், சங்கராபுரம், மயிலம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 16 தொகுதிகள் இருந்தன.
தொகுதி வரையறைக்கு பின்னா் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூா் (தனி), விக்கிரவாண்டி, விழுப்புரம், திருக்கோவிலூா் என 7 தொகுதிகளும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூா்பேட்டை, கள்ளக்குறிச்சி (தனி), ரிஷிவந்தியம், சங்கராபுரம் என 4 தொகுதிகளும் உருவாக்கப்பட்டன.
இந்நிலையில், 1967-இல் உருவாக்கப்பட்டு 10-க்கும் மேற்பட்ட முறைகள் தோ்தலைக் கண்ட கண்டமங்கலம் தொகுதி நீக்கப்பட்டு அந்தப் பகுதிகள் வானூா் தொகுதியிலும், 8 முறை தோ்தலைக் கண்ட மேல்மலையனூா் தொகுதி நீக்கப்பட்டு அந்தப் பகுதிகள் செஞ்சி தொகுதியிலும், திருநாவலூா் தொகுதி நீக்கப்பட்டு அந்தப் பகுதிகள் உளுந்தூா்பேட்டையிலும், சின்னசேலம் தொகுதி நீக்கப்பட்டு அந்தப் பகுதிகள் கள்ளக்குறிச்சியிலும், முகையூா் தொகுதி நீக்கப்பட்டு அந்தப் பகுதிகள் திருக்கோவிலூா் தொகுதியிலும் சோ்க்கப்பட்டு அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், கள்ளக்குறிச்சியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னா் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளின் முன்னோடிகள் களம் கண்ட கண்டமங்கலம், மேல்மலையனூா், முகையூா், திருநாவலூா், சின்னசேலம் ஆகிய 5 தொகுதிகள், தொகுதி மறுசீரமைப்பில் மறைந்து போயின.
தொடர்புடையது

தொகுதி அறிமுகம்! திருக்கோவிலூர்!

விழுப்புரம் மண்டலத்தில் 19 தொகுதிகளில் களம் காணும் திமுக
தொகுதி அறிமுகம்... திருப்போரூர்!

விருத்தாசலம், தென்காசி தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை: ஈரோடு கிழக்கு மீண்டும் ஒதுக்கீடு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


