வருவாய் நிர்வாக ரீதியில் கள்ளக்குறிச்சியில் அமைந்திருந்தாலும், சட்டப்பேரவைத் தொகுதி ரீதியாக விழுப்புரம் மாவட்டத்தில் இணைந்துள்ள தொகுதி திருக்கோவிலூர்.
பாடல்பெற்ற வைணவத் தலமான உலகளந்த பெருமாள் திருக்கோயில், அட்டவீரத் தலங்களில் ஒன்றான வீரட்டானேசுவரர் திருக்கோயில்கள் திருக்கோவிலூரில் அமைந்துள்ளன. மேலும், புகழ்வாய்ந்த கபிலர் குன்றும் இந்த தொகுதியில்தான் அமைந்துள்ளது.
திருக்கோவிலூர் நகரப் பகுதிகள் முழுமையாகவும், ஒன்றியப் பகுதிகளில் 20 கிராமங்களும் இந்த தொகுதியில் அடங்கியுள்ளன. இவைத் தவிர அரகண்டநல்லூர் பேரூராட்சிப் பகுதிகள், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியின் குறிப்பிட்ட பகுதிகள், கண்டாச்சிபுரம் வட்டம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது திருக்கோவிலூர் தொகுதி. கிராமப்புறங்கள் அதிகம் உள்ள தொகுதி.
1952-இல் உருவாக்கப்பட்ட திருக்கோவிலூர் தொகுதி. 1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு முகையூர் தொகுதியாக மாறியது. இதைத் தொடர்ந்து தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு முகையூர் தொகுதி நீக்கப்பட்டு, 2011-ஆம் ஆண்டில் மீண்டும் திருக்கோவிலூர் தொகுதியானது.
எதிர்பார்ப்புகள்: திருக்கோவிலூரில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்பெண்ணையாற்றில் தடுப்பணைகள் தேவைப்படும் இடங்களில் தடுப்பணைகளைக் கட்ட வேண்டும். கண்டாச்சிபுரம் தனி வட்டமாகப் பிரிக்கப்பட்டாலும் உரிமையியல் மற்றும் சிவில் நீதிமன்றங்கள் இல்லை. இதனால் மக்கள் திருவெண்ணெயநல்லூர், விக்கிரவாண்டி நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, உரிமையியல், சிவில் நீதிமன்றங்களை கண்டாச்சிபுரத்தில் அமைக்க வேண்டும்.
திருக்கோவிலூரின் சிறப்புவாய்ந்த கபிலர் குன்றை முறையாகப் பராமரிப்பதுடன், கபிலர் கோட்டத்தையும் அமைக்க வேண்டும். திருக்கோவிலூர் பெரிய ஏரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருந்தாலும், அவற்றில் அசுத்தம் அதிகம் காணப்படுகிறது. எனவே, பெரிய ஏரியைத் தூர்வாரி ஆழப்படுத்தி, அதன் கரைகளைப் பலப்படுத்துவதுடன் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நடைப்பாதைகளையும் உருவாக்கித்தர வேண்டும். திருக்கோவிலூர் நகரில் உழவர்சந்தை அமைக்க வேண்டும். திருக்கோவிலூரில் புறவழிச்சாலையை இணைக்கும் வகையில் பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும்.
வெற்றி பெற்றவர் விவரம்
வாக்காளர் விவரம்
ஆண்கள் - 121023
பெண்கள் 119948
மூன்றாம் பாலினத்தவர் 32
மொத்தம் - 241003
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்

தொகுதி அறிமுகம்: பரமத்திவேலூா்
கள்ளக்குறிச்சி தொகுதி அறிமுகம்!

செஞ்சி தொகுதி அறிமுகம்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


