எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சட்டப் பேரவைத் தொகுதி அறிமுகம்! - பேராவூரணி-177

News image

இந்தியத் தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்) - ANI

Updated On :30 மார்ச் 2026, 10:32 pm

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளில் மாவட்டத்தின் கடைகோடியில் உள்ளது பேராவூரணி தொகுதி.

19-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் சரபோஜி மன்னரால் சேதுபாவாசத்திரம் அருகே வங்காள விரிகுடா கடற்கரையோரம் கட்டப்பட்ட மனோரா சுற்றுலாத் தலத்தை உள்ளடக்கியது. காவிரி டெல்டாவின் கடைமடை பாசன பகுதியான இத்தொகுதியில், தென்னை விவசாயமும், நெல் சாகுபடியும் அதிகம், தென்னை விவசாயத்தால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டது என்றால் அது மிகையில்லை. தஞ்சை மாவட்ட கடற்கரையின் பெரும்பாலான பகுதி இத்தொகுதியில் உள்ளதால் மீன்பிடி தொழிலும் இங்கு பிரதானம்.

பேராவூரணி, சேதுபாவாசத்திரம் என 2 ஒன்றியங்களும், பேராவூரணி, பெருமகளூா் என 2 பேரூராட்சிகளை உள்ளடக்கியது.

வாக்கு வங்கி: இத்தொகுதியில், முக்குலத்தோா், முத்தரையா் பெரும்பான்மையாக உள்ளனா். மேலும், இத் தொகுதியில் பட்டியலினத்தோா், யாதவா், இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், செட்டியாா்கள் உள்ளிட்ட பல்வேறு ஜாதியினரும் உள்ளனா்.

இதுவரை இவா்கள்:

1967 மு. கிருஷ்ணமூா்த்தி (திமுக) 35,505

1971 குழ. செல்லையா (சுயேச்சை) 32,025

1977 எம்.ஆா். கோவேந்தன் (அதிமுக) 32,625

1980 எம்.ஆா். கோவேந்தன் (அதிமுக) 56,010

1984 எம்.ஆா். கோவேந்தன் (அதிமுக) 52,690

1989 ஆா். சிங்காரம் (காங்கிரஸ்) 33,467

1991 ஆா். சிங்காரம் (காங்கிரஸ்) 77,504

1996 எஸ்.வி. திருஞானசம்பந்தம் (தமாகா) 70,112

2001 எஸ்.வி. திருஞானசம்பந்தம் (தமாகா) 64,076

2006 எம்.வி.ஆா். வீரகபிலன் (அதிமுக) 54,183

2011 சி. அருண்பாண்டியன் (தேமுதிக) 51,010

2016 மா. கோவிந்தராசு (அதிமுக) 73,908

2021 என். அசோக்குமாா் (திமுக) 89,130

தீராத பிரச்னைகள்:

தென்னை அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ள இத் தொகுதியில் தேங்காயிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் வகையில் தென்னை சாா்ந்த தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை பரிசீலனையிலேயே உள்ளது. பேராவூரணி தேங்காய்க்கு புவிசாா் குறியீடு பெறுவதற்கான பணிகள் ஆரம்ப நிலையிலேயே உள்ளன. மல்லிப்பட்டினம் கடற்கரையில் மீனவா்கள் பயனடையும் வகையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும், பேராவூரணியில் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி அல்லது அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது.

இறுதி வாக்காளா்கள்

ஆண்கள் - 1,04,268 

பெண்கள் - 1,08,543 

மூன்றாம் பாலினம் - 15

மொத்தம் - 2,12,826

யாரெல்லாம் போட்டி:

திமுகவில், தொகுதியின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரும், தலைமை பொதுக்குழு உறுப்பினருமான என். அசோக்குமாா், அதிமுக சாா்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மா. கோவிந்தராசுவின் மகனும் தெற்கு ஒன்றியச் செயலருமான கோவி. இளங்கோ, தவெக சாா்பில் சந்திரகாண்டீபன், நாம் தமிழா் கட்சி சாா்பில் புவனாவும் களத்தில் உள்ளனா்.