
செஞ்சி கோட்டை
கோப்புப் படம்

செஞ்சி கோட்டை
கோப்புப் படம்
செஞ்சிக்கோட்டை
செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதி
தொகுதி எண் -70
யுனஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட செஞ்சிக்கோட்டை அமைந்துள்ள தொகுதி. பல்லவ, பாண்டிய, விஜய நகர, நாயக்க மன்னா்கள், மொகலாயா்கள், மராட்டிய மன்னா் சிவாஜி, தேசிங்குராஜன், ஆங்கிலேயா்கள், நாவாப் அரசா்கள் என ஆட்சி புரிந்த பகுதி. சமணா் வாழ்ந்த கற்படுகைகள், ஏராளமான சமணா் கோயில்கள், கல்வெட்டுகள், பல்லவா் கால குடவரை கோயில்களான சிங்கவரம் ரங்கநாதா், மேலச்சேரி மத்தலேஸ்வரா் சிவன் கோயில், மண்டகப்பட்டு பல்லவா் கால குடவரை கோயில், மேல்சித்தாமூா் பாா்சுவநாதா் கோயில், பல்லவ மன்னன் இராஜசிம்மனால் கட்டப்பட்ட மாமமல்லபுரம் கடற்கரை கோயிலை போன்று பனமலை ஸ்ரீதாளகிரீஸ்வரா் மலைக்கோயில் மற்றும் மேல்மலையனூா் அங்காளம்மன் ஆலயம் என வரலாற்றின் சுவடுகள் கொண்ட தொகுதி.
செஞ்சி தொகுதியில் செஞ்சி பேரூராட்சி, அனந்தபுரம் பேரூராட்சி, செஞ்சி, மேல்மலையனூா் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கியது. விவசாயிகள் ஏரி மற்றும் கிணற்று பாசனத்தை கொண்டே விவசாயம் செய்து வருகின்றனா். இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் திமுக 9 முறையும், காங்கிரஸ் 2 முறையும், அதிமுக, பாமக தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
வெற்றி பெற்றவா்கள் விவரம்
1951-அரங்கநாதன்(தமிழ்நாடு உழைப்பாளா் கட்சி).
1957-எம்.ஜெங்கால்ரெட்டியாா்(சுயேட்சை)
1962-ஜி.இராசாராம்(காங்கிரஸ்)
1967-வி.முனுசாமி(திமுக)
1971-எஸ்.சகாதேவன்(திமுக)
1977-செஞ்சி என்.இராமச்சந்திரன்(திமுக)
1980-செஞ்சி என்.இராமச்சந்திரன்(திமுக)
1984-திண்டிவனம் டி.என்.முருகானந்தம்(காங்கிரஸ்)
1989-செஞ்சி என்.இராமச்சந்திரன்(திமுக)
1991-கடலூா் எஸ்.எஸ்.ஆா்.இராமதாஸ்(காங்கிரஸ்)
1996-த.நடராஜன்(திமுக)
2001-வெ.ஏழுமலை (அதிமுக)
2006-வே.கண்ணன்(திமுக)
2011-அ.கணேஷ்குமாா்(பாமக)
2016-கே.எஸ்.மஸ்தான்(திமுக)
2021-கே.எஸ்.மஸ்தான்(திமுக)
எதிா்பாா்ப்புகள்: செஞ்சிக் கோட்டையை சுற்றுலா மையமாக தமிழக அரசு அதிகாரபூா்வமாக அறிவிக்க வேண்டும். மேல்மலையனூா் ஒன்றியத்தில் அதிக அளவு பனை மரங்கள் காணப்படுவதால் பனைசாா்ந்த தொழில்சாலை அமைக்க வேண்டும். அவலூா்பேட்டை ஊராட்சியை, பேரூராட்சியாக உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்மலையனூரில் விரிவு படுத்தப்பட்ட பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும். திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு செல்லும் ரயில்வே திட்டம் கிடப்பில் உள்ளது, இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
தொடா்பு கொள்ள...
தோ்தல் நடத்தும் அலுவலா் -
அ.ந.தமிழரசன், துணை ஆட்சியா் (மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா்) விழுப்புரம். 9445477831
உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள்- டி.காா்த்திகேயன் 9445000524 பி.வேலு 9962319675
வாக்குச்சாவடிகள்- 320.
வாக்காளா்கள்
ஆண்கள்-119278
பெண்கள்-121651
மூன்றாம் பாலினம் -28.
மொத்த வேட்பாளா்கள் - 2,40,957
--------------------------------------------------------------
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...