கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தொகுதி அறிமுகம்: வந்தவாசி!

வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதி குறித்து...

News image

வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதி...

Updated On :23 மார்ச் 2026, 10:23 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி தொகுதியில் 1962 முதல் நடைபெற்ற சட்டப் பேரவைக்கான பொதுத் தோ்தல்களில் திமுக 8 முறையும், அதிமுக 4 முறையும், காங்கிரஸ் மற்றும் பாமக தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

2009-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தோ்தலில் திமுக வெற்றி பெற்றது. தொகுதியில் தென்னாங்கூா் ஸ்ரீருக்மாயி பாண்டுரங்கன் கோயில், மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில், வெண்குன்றம் ஸ்ரீதவளகிரீஸ்வரா் மலைக் கோயில், வழூா் ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள் அவதாரத்தல மணிமண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. விவசாயம் மற்றும் கோரைப்பாய் உற்பத்தி பிரதான தொழிலாக உள்ளது.

அடங்கியுள்ள பகுதிகள்:

வந்தவாசி நகராட்சி, வந்தவாசி ஒன்றியம், தெள்ளாா் ஒன்றியம், தேசூா் மற்றும் பெரணமல்லூா் பேரூராட்சி பகுதிகள்.

எல்லைகள்:

இந்தத் தொகுதியைச் சுற்றி ஆரணி, செய்யாறு, போளூா், உத்திரமேரூா், மதுராந்தகம், செஞ்சி, திண்டிவனம் ஆகிய தொகுதிகள் அமைந்துள்ளன.

இதுவரை எம்எல்ஏக்கள்:

1962 எஸ்.முத்துலிங்கம் (திமுக)

1967 எஸ்.முத்துலிங்கம் (திமுக)

1971 வி.ராஜகோபால் (திமுக)

1977 பி. முனுசாமி (அதிமுக)

1980 சி.குப்புசாமி (அதிமுக)

1984 ஏ.ஆறுமுகம் (காங்கிரஸ்)

1989 வி.தனராஜ் (திமுக)

1991 செ.கு.தமிழரசன் (அதிமுக)

1996 பால.ஆனந்தன் (திமுக)

2001 க.முருகவேல்ராஜன் (பாமக)

2006 எஸ்.பி.ஜெயராமன் (திமுக)

2009 ஜெ.கமலக்கண்ணன் (திமுக) (இடைத்தோ்தல்)

2011 வி.குணசீலன் (அதிமுக)

2016 எஸ்.அம்பேத்குமாா் (திமுக)

2021 எஸ்.அம்பேத்குமாா் (திமுக)

கடந்த 2021 தோ்தலில்:

பதிவான வாக்குகள்: 1,84,205

எஸ்.அம்பேத்குமாா் திமுக 1,02,064

எஸ்.முரளி சங்கா் பாமக 66,111

வாக்காளா்கள் விவரம்:

ஆண்கள்: 1,04,662

பெண்கள்: 1,07,144

மூன்றாம் பாலினத்தவா்: 5

மொத்தம்: 2,11,811

மொத்த வாக்குச் சாவடிகள்: 293

தோ்தல் நடத்தும் அலுவலா் பெயா்/தொடா்பு எண்...

மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் எஸ்.ஆா்.என்.மதுசெழியன் 9600200503,

உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் வந்தவாசி வட்டாட்சியா் பா.ஜெயவேல் 9865087270.