மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் 2- வது நாள் மாநாடு தொடங்கியது!சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்
/

இந்தியா ஏ - தெ.ஆ. ஏ அணிகள் பங்கேற்ற 2-வது டெஸ்ட்: முடிவு என்ன?

ஈஸ்வரன் 55 ரன்களும் விஹாரி 72 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

News image

விஹாரி (கோப்புப் படம்)

Updated On :4 டிசம்பர் 2021, 11:02 am IST

இந்தியா ஏ - தெ.ஆ. ஏ அணிகள் பங்கேற்ற 2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது.

குஜராத்தைச் சேர்ந்த பிரியங் பஞ்சால் தலைமையிலான இந்திய ஏ அணி தென்னாப்பிரிக்காவின் ப்ளூம்ஃபோண்டைனில் நடைபெறும் தொடரில் கலந்துகொள்கிறது. மூன்று அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடர் டிசம்பர் 9-ல் நிறைவுபெறுகிறது. இந்த ஆட்டம் சூப்பர் ஸ்போர்ட் யூடியூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது. 

2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க ஏ அணி 297 ரன்கள் எடுத்தது. மார்கோ ஜான்சன் 70 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய ஏ அணியில் நவ்தீப் சைனி, இஷான் போரல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இந்த ஆட்டத்தில் இடம்பெற்ற தமிழக வீரர் பாபா அபரஜித், 1 விக்கெட் எடுத்தார்.

இந்திய ஏ அணி 74.5 ஓவர்களில் 276 ரன்கள் எடுத்தது. சர்ஃபராஸ் கான் 71 ரன்கள் எடுத்தார். கிளெண்டன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பிறகு தெ.ஆ. ஏ அணி 58.5 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்தது. எந்த ஒரு பேட்டரும் அரை சதம் எடுக்கவில்லை. இஷான் போரல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய ஏ அணி வெற்றி பெற 234 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய ஏ அணி 41.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அபிமன்யு ஈஸ்வரன் 55 ரன்களும் விஹாரி 72 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இதனால் 2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. 

3-வது டெஸ்ட், டிசம்பர் 6 அன்று தொடங்குகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.