உலக சாம்பியன்ஷிப்: காலிறுதியில் பி.வி. சிந்து தோல்வி

உலக சாம்பியன்ஷிப்: காலிறுதியில் பி.வி. சிந்து தோல்வி

உலக சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து காலிறுதியில் தோல்வியடைந்துள்ளார்.

உலக சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து காலிறுதியில் தோல்வியடைந்துள்ளார்.

ஸ்பெயினில் உள்ள வெல்வாவில் நடைபெற்று வரும் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதிச் சுற்றில் இந்தியாவின் பி.வி. சிந்து, சீன தைபேவைச் சேர்ந்த உலகின் நெ.1 வீராங்கனை தாய் ஸு யிங்கை எதிர்கொண்டார். சிந்து, நடப்பு சாம்பியனாக உள்ளதால் அவருடைய வெற்றியை இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். எனினும் இருவரும் இதுவரை மோதிய ஆட்டங்களில் 14-ல் தாய் ஸுவும் 5-ல் சிந்துவும் வெற்றி பெற்றிருந்தார்கள். மேலும் கடைசியாக மோதிய 4 ஆட்டங்களிலும் தாய் ஸுவிடம் சிந்து தோல்வியடைந்திருந்தார். இதனால் இன்றைய ஆட்டம் சிந்துவுக்குச் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இன்றைய காலிறுதி ஆட்டத்தில் 21-17, 21-13 என சிந்துவை வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் தாய் ஸு. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதல்முறையாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார் தாய் ஸு. 2-வது முறையாக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் எதுவும் வெல்லாமல் நாடு திரும்புகிறார் சிந்து. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com