லக்னெள ஐபிஎல் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அறிவிப்பு

லக்னெள ஐபிஎல் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பிரபல முன்னாள் வீரர் ஆன்டி ஃபிளவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
லக்னெள ஐபிஎல் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அறிவிப்பு


லக்னெள ஐபிஎல் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பிரபல முன்னாள் வீரர் ஆன்டி ஃபிளவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் முதல் லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. இதில் லக்னௌ அணியை, கொல்கத்தாவைச் சோ்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்காவின் ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ரூ. 7,090 கோடிக்கு வாங்கியுள்ளது. ஆமதாபாத் அணியைச் சா்வதேசப் பங்கு முதலீட்டு நிறுவனமான சிவிசி கேபிடல் ரூ. 5,600 கோடிக்குச் சொந்தமாக்கியுள்ளது. ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ஏற்கெனவே கடந்த 2016-17 காலகட்டத்தில் ரைசிங் புணே சூப்பா் ஜெயன்ட் அணி உரிமையாளராக இருந்தது.

ஐபிஎல் 2022 போட்டியில் விளையாடும் வீரர்களுக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. ஏலத்துக்கு முன்பு உள்ள வீரர்களின் பட்டியலில் இருந்து 3 வீரர்களைத் தேர்வு செய்துகொள்ள இரு புதிய அணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் லக்னெள அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பிரபல முன்னாள் வீரர் ஆன்டி ஃபிளவர் நியமிக்கப்பட்டுள்ளார். 2020-ம் ஆண்டு முதல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளராக ஆன்டி ஃபிளவர் பணியாற்றியுள்ளார். இங்கிலாந்து அணி, 2010-ல் டி20 உலகக் கோப்பையை வென்றபோது ஆன்டி ஃபிளவர் பயிற்சியாளராக இருந்தார். சமீபத்தில் முடிந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராகவும் பணியாற்றினார். 

53 வயது ஆன்டி ஃபிளவர், 1992 முதல் 2003 வரை ஜிம்பாப்வே அணிக்காக 63 டெஸ்டுகள், 213 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com