பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கரோனா
By DIN | Published On : 28th December 2021 10:51 AM | Last Updated : 28th December 2021 10:51 AM | அ+அ அ- |

செளரவ் கங்குலி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின்(பிசிசிஐ) தலைவருமான செளரவ் கங்குலிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொண்ட கங்குலிக்கு லேசான அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கங்குலிக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை இரவு உறுதி செய்யப்பட்டது.
இந்தாண்டு தொடக்கத்தில் நெஞ்சு வலிக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டதால், முன்னெச்சரிக்கை காரணமாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், அவர் நலமாக இருப்பதாகவும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பிசிசிஐ தரப்பிலிருந்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு தகவல் வெளியாகியுள்ளது.