ஷமி 5 விக்கெட்டுகள்: 197 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா ஆட்டமிழந்தது

இந்தியாவுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஷமி 5 விக்கெட்டுகள்: 197 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா ஆட்டமிழந்தது


இந்தியாவுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் செஞ்சூரியனில் டிசம்பர் 26-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதல் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து, தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்யத் தொடங்கியது. இந்திய வேகப்பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் தென் ஆப்பிரிக்க அணி 32 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்த திணறியது.

இதன்பிறகு, தெம்பா பவுமாவுடன் குயின்டன் டி காக் இணைந்தார். இந்த இணை சிறிய பாட்னர்ஷிப்பை அமைத்து விக்கெட் இழப்பைக் கட்டுப்படுத்தியது. 

34 ரன்கள் சேர்த்த நிலையில் ஷர்துல் தாக்குர் பந்தில் டி காக் போல்டானார். சற்று தாக்குப்பிடித்து விளையாடிய பவுமா அரைசதம் அடித்து 52 ரன்கள் சேர்த்தார். டெயிலண்டர்களால் பெரிதளவில் ரன் சேர்க்க முடியவில்லை.

இதனால், அந்த அணி 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணித் தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், ஜாஸ்பிரித் பும்ரா மற்றும் ஷர்துல் தாக்குர் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 130 ரன்கள் என்ற முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com