ஆஷஸ்: எந்த ஒரு வீரருக்கும் கரோனா பாதிப்பு இல்லை

இரு அணி வீரர்களின் கரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவந்ததில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது.
ஆஷஸ்: எந்த ஒரு வீரருக்கும் கரோனா பாதிப்பு இல்லை

ஆஷஸ் தொடரில் இரு அணி வீரர்களின் கரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவந்ததில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டை வென்று ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலிய அணி.  3-ம் நாளில் இங்கிலாந்து அணி மேலும் மோசமாக விளையாடி 27.4 ஓவர்களில் 68 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸி. அணியின் அறிமுக வீரர் ஸ்காட் போலண்ட் 4 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆட்ட நாயகன் விருது அவருக்குக் கிடைத்தது. 3-வது டெஸ்டை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி, ஆஷஸ் தொடரையும் வென்றுள்ளது. இதனால் ஆஷஸ் கோப்பையைத் தக்கவைத்துள்ளது.

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த நால்வருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 2-ம் நாள் ஆட்டம் சற்று தாமதமாகத் தொடங்கியது. இங்கிலாந்து அணியின் இரு பணியாளர்கள், பணியாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் என மொத்தமாக நான்கு பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 2-ம் நாள் ஆட்டம் தொடங்கும் முன்பு, இங்கிலாந்து அணியைச் சேர்ந்த அனைவருக்கும் ரேபிட் ஆண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் கரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டது.

2-ம் நாள் முடிந்த பிறகு இரு அணி வீரர்களுக்கும் பிசிஆர் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று 3-ம் நாள் ஆட்டம் தொடங்கும் முன்பு, பரிசோதனையின் முடிவுகள் வெளிவந்தன. யாருக்கும் கரோனா இல்லை என்பது பரிசோதனையில் தெரிய வந்தது. மேலும் இரு அணி வீரர்களின் குடும்பத்தினருக்கும் கரோனா பாதிப்பு இல்லை. இதனால் இரு அணி வீரர்கள் நிம்மதியாக களத்தில் இறங்கினார்கள். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். டெஸ்டும் எவ்விதச் சிக்கலும் இன்றி முடிவடைந்தது. இத்தகவல்களை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com