13 கிலோ எடை கூடிவிட்டேன்: நீரஜ் சோப்ரா

ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு 13 கிலோ வரை எடை கூடி விட்டதாக பிரபல வீரர் நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.
13 கிலோ எடை கூடிவிட்டேன்: நீரஜ் சோப்ரா

ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு 13 கிலோ வரை எடை கூடி விட்டதாக பிரபல வீரர் நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா (23) தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தாா். இறுதிச்சுற்றில் அவா் 87.58 மீட்டா் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தாா். 

கடந்த 1920 ஆன்ட்வொ்ப் ஒலிம்பிக் போட்டியில் தொடங்கி, 101 ஆண்டுகளாக அந்த விளையாட்டுத் திருவிழாவில் களம் கண்டு வரும் இந்தியாவுக்கு தடகளத்தில் கிடைத்துள்ள முதல் மகுடம் இது. முன்னதாக ஒலிம்பிக் தடகளத்தில் ஓட்டப் பந்தயத்தில் மில்கா சிங் (1960 ரோம்), பி.டி.உஷா (1984 லாஸ் ஏஞ்சலீஸ்) போராடி தவற விட்ட பதக்க வாய்ப்புகளை, தற்போது நீரஜ் சோப்ரா தட்டிச் சென்றுள்ளாா். ஆகஸ்ட் 7 அன்று ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா. இதையொட்டி ஆகஸ்ட் 7-ம் தேதியை தேசிய ஈட்டி எறிதல் நாளாக தேதி கொண்டாடப்படும் என இந்தியத் தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில் இணையம் வழியாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் நீரஜ் சோப்ரா கூறியதாவது:

90 மீ. தூரம் எறிய வேண்டும் என லட்சியம் கொண்டுள்ளேன். அப்படிச் செய்தால் சிறந்த ஈட்டி எறிதல் வீரர்களில் ஒருவராக நான் இருப்பேன். அந்த இலக்கைக் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டேன். விரைவில் அதைத் தொட்டுவிடுவேன். அதேசமயம் அதை அடைந்தே தீரவேண்டும் என்கிற அழுத்தம் எனக்குள் இல்லை. இந்த வருடம் அந்த தூரத்தைக் கடந்துவிட வேண்டும் என எண்ணுகிறேன். 

ஒலிம்பிக் போட்டியிலிருந்து திரும்பி வந்த பிறகு நான் விரும்பியதெல்லாம் சாப்பிட்டேன். என் ஆசையைக் கட்டுப்படுத்தவில்லை. ஏனெனில் நீண்ட நாளாக உணவுக் கட்டுப்பாட்டுடன் இருந்தேன். பிறகு 12-13 கிலோ எடை கூடிவிட்டேன். இப்போது 22 நாள்களாகப் பயிற்சி எடுத்து வருகிறேன். இதனால் 5.5 கிலோ எடையைக் குறைத்துவிட்டேன். போட்டிகளில் பங்குபெறாத காலகட்டங்களில் என்ன எடையில் இருப்பேனோ அதைத் தற்போது அடைந்துவிட்டேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com