டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: இந்தியத் தடகள அணியில் இரு தமிழக வீரர்கள்

தடகள வீரர்களான ஆரோக்ய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகிய இருவரும் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கான...
ஆரோக்ய ராஜீவ்
ஆரோக்ய ராஜீவ்

தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்களான ஆரோக்ய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகிய இருவரும் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கான இந்தியத் தடகள அணியில் இடம்பெற்றுள்ளார்கள். 

டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 5 வரை ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக 26 போ் கொண்ட தடகள அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்தது. இதில் தனிநபா் தடகள போட்டிகளில் பங்கேற்கும் 16 போ், ஆடவருக்கான 4*400 மீ தொடர் ஓட்டத்தில் பங்கேற்கும் 5 போ், கலப்பு 4*400 மீ தொடர் ஓட்டத்தில் 2 ஆடவா், 3 மகளிா் ஆகியோா் உள்ளார்கள். 

தமிழ்நாட்டைச் சேர்ந்த தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகிய மூன்று வீராங்கனைகளும் கலப்பு 4*400 மீ தொடர் ஓட்டத்துக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள். 

இவர்களைத் தவிர ஆரோக்ய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகிய இரு தமிழக வீரர்களும் இந்தியத் தடகள அணியில் இடம்பெற்றுள்ளார்கள். 4*400 மீ தொடர் ஓட்டத்துக்கான அணியில் இருவருக்கும் இடம் கிடைத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com