டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: இந்தியத் தடகள அணியில் மூன்று தமிழக வீராங்கனைகள்

தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகிய மூவரும்...
தனலட்சுமி
தனலட்சுமி
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனைகளான தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகிய மூவரும் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கான இந்திய தடகள அணியில் இடம்பெற்றுள்ளார்கள். 

டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 5 வரை ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக 26 போ் கொண்ட தடகள அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்தது. இதில் தனிநபா் தடகள போட்டிகளில் பங்கேற்கும் 16 போ், ஆடவருக்கான 4*400 மீ தொடர் ஓட்டத்தில் பங்கேற்கும் 5 போ், கலப்பு 4*400 மீ தொடர் ஓட்டத்தில் 2 ஆடவா், 3 மகளிா் ஆகியோா் உள்ளார்கள். 

காயம் காரணமாக கர்நாடகத்தின் பூவம்மா, 4*400 மீ தொடர் ஓட்டத்தில் பங்கேற்கவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகிய மூன்று வீராங்கனைகளும் கலப்பு 4*400 மீ தொடர் ஓட்டத்துக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com