இந்திய பேட்மிண்டன் வீரர்கள் மூவருக்கு கரோனா
By DIN | Published On : 17th March 2021 03:56 PM | Last Updated : 17th March 2021 05:26 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பங்குபெறும் 3 இந்திய பேட்மிண்டன் வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்தியக் குழுவிலுள்ள பணியாளர் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை இந்திய பேட்மிண்டன் பயிற்சியாளர் உறுதி செய்துள்ளார்.
ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டனின்போது கூட தனிமையில் இருந்ததாகவும், தற்போது கரோனா தொற்று ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், எஞ்சியவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
எஞ்சிய வீரர்களின் பட்டியலில் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், பருபல்லி காஷ்யப் ஆகியோர் உள்ளனர். அனைத்து வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் முழு அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...