இந்திய பேட்மிண்டன் வீரர்களுக்கு கரோனா இல்லை: மறுபரிசோதனையில் உறுதி
By DIN | Published On : 17th March 2021 04:49 PM | Last Updated : 17th March 2021 04:49 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட இந்திய பேட்மிண்டன் வீரர்களுக்கு உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு நடத்திய பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், அனைத்து இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
முன்னதாக, இந்திய பேட்மிண்டன் வீரர்கள் 3 பேர் உள்பட 4 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பதாக பரிசோதனை முடிவு வெளியானதால் குழப்பம் ஏற்பட்டது.