கரோனா பாதிப்பு: முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி. சிங்கின் தந்தை காலமானார்
By DIN | Published On : 13th May 2021 03:48 PM | Last Updated : 13th May 2021 03:48 PM | அ+அ அ- |

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆர்.பி. சிங்கின் தந்தை கரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளார்.
2018-ல் ஓய்வு பெற்ற ஆர்.பி. சிங், கிரிக்கெட் வர்ணனையாளராக உள்ளார். ஐபிஎல் போட்டியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸின் ஹிந்தி வர்ணனையாளராகப் பணியாற்றினார்.
35 வயது ஆர்.பி. சிங்கின் தந்தை ஷிவ் பிரசாத் சிங் கரோனா வைரஸால் சமீபத்தில் பாதிப்படைந்தார். இதனால் தந்தையை அருகில் இருந்து கவனித்துக் கொள்வதற்காக ஐபிஎல் போட்டிக்காகக் கடைப்பிடிக்கப்பட்ட கரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறினார் ஆர்.பி. சிங். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தனது தந்தை மரணமடைந்துள்ளதாக ட்விட்டரில் அவர் அறிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக 14 டெஸ்டுகள், 58 ஒருநாள், 10 டி20 ஆட்டங்களில் ஆர்.பி. சிங் விளையாடியுள்ளார்.