சிறப்பாகப் பந்துவீசும் அஸ்வின்: இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்குமா?

நான்கு வருடங்களுக்குப் பிறகு இந்திய டி20 அணியில் இடம்பிடித்த அஸ்வின்...
சிறப்பாகப் பந்துவீசும் அஸ்வின்: இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்குமா?

இந்திய டி20 அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் அஸ்வின், சிறப்பாகப் பந்துவீசி இந்திய அணியின் வெற்றிகளுக்கு முக்கியப் பங்களித்து வருகிறார்.

கடைசியாக ஜூலை 2017-ல் மேற்கிந்தியத் தீவுகளில் சர்வதேச டி20 ஆட்டத்தில் அஸ்வின் விளையாடினார். அதன்பிறகு இந்திய அணி விளையாடிய 63 டி20 ஆட்டங்களில் அவர் இடம்பெறவில்லை.  ஒருவழியாக 2021 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அஸ்வின் இடம்பெற்றபோது பலரும் ஆச்சர்யப்பட்டார்கள்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய அஸ்வின், 3 ஆட்டங்களில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எகானமி - 5.25. ஆரம்பத்தில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கியிருந்தால் ஒருவேளை இந்திய அணி இன்னும்கூட சிறப்பாக விளையாடியிருக்கலாம். 

நான்கு வருடங்களுக்குப் பிறகு இந்திய டி20 அணியில் இடம்பிடித்த அஸ்வின், உலகக் கோப்பையில் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தியதால் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கும் தேர்வானார். 

ஜெய்ப்பூரில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின். நன்கு விளையாடி வந்த மார்க் சாப்மேனை வீழ்த்திய அஸ்வின், அதே ஓவரில் கிளென் பிளிப்ஸை வீழ்த்தி அசத்தினார். 14-வது ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் என்கிற வலுவான நிலையில் இருந்த நியூஸிலாந்து ஒரே ஓவரில் அஸ்வினிடம் இரு விக்கெட்டுகளை இழந்ததால் தடுமாறியது. இறுதியில் 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. நேற்றைய ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளுடன் குறைவான ரன்கள் கொடுத்தது அஸ்வின் மட்டுமே. இனிமேலாவது அஸ்வினை இந்திய அணியிலிருந்து நீக்காமல் தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இனிமேல் அஸ்வின் எக்ஸ்பிரஸை யாரால் தடுத்து நிறுத்த முடியும்?

அஸ்வின் பந்துவீச்சு: இந்திய அணியில் மீண்டும் இடம்பெற்ற பிறகு... 

4-0-14-2
4-0-29-1
4-0-20-3
4-0-23-2

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com