அடுத்த 9 மாதங்களுக்கு இந்திய அணி விளையாடவுள்ள கிரிக்கெட் தொடர்கள்: அதிகாரபூர்வ அட்டவணை

இந்திய அணி வீரர்கள் ஏற்கெனவே ஓய்வில்லாமல் விளையாடி வருகிறார்கள். அடுத்த வருட ஜுலை வரை அதே நிலைமை தான் நீடிக்கவுள்ளது.
அடுத்த 9 மாதங்களுக்கு இந்திய அணி விளையாடவுள்ள கிரிக்கெட் தொடர்கள்: அதிகாரபூர்வ அட்டவணை

இந்திய கிரிக்கெட் அணி, அடுத்த வருட ஜூலை வரை விளையாடவுள்ள ஆட்டங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி வீரர்கள் ஏற்கெனவே ஓய்வில்லாமல் விளையாடி வருகிறார்கள். அடுத்த வருட ஜுலை வரை அதே நிலைமை தான் நீடிக்கவுள்ளது.

இந்தியாவில் நியூசிலாந்து

டி20 உலகக் கோப்பை முடிந்த பிறகு இந்தியாவில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய டி20 தொடரில் 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. அடுத்ததாக இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

டெஸ்ட் தொடர்

நவம்பர் 25 - முதல் டெஸ்ட், கான்பூர்
டிசம்பர் 3 - 2-வது டெஸ்ட், மும்பை

இந்தியாவின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணம்

நியூசிலாந்து டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள், 4 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. 

டெஸ்ட் தொடர்

முதல் டெஸ்ட் - டிசம்பர் 17, ஜொகன்னஸ்பர்க்
2-வது டெஸ்ட் - டிசம்பர் 26, செஞ்சுரியன்
3-வது டெஸ்ட் - ஜனவரி 3 - கேப் டவுன்

ஒருநாள் தொடர்

முதல் ஒருநாள் - ஜனவரி 11, பார்ல்
2-வது ஒருநாள் - ஜனவரி 14, கேப் டவுன்
3-வது ஒருநாள் - ஜனவரி 16, கேப் டவுன்

டி20 தொடர்

முதல் டி20 - ஜனவரி 19, கேப் டவுன்
2-வது டி20 - ஜனவரி 21, கேப் டவுன்
3-வது டி20 - ஜனவரி 23, பார்ல்
4-வது டி20 - ஜனவரி 26, பார்ல்

இந்தியாவில் மேற்கிந்தியத் தீவுகள்

இந்தியாவில் 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது மேற்கிந்தியத் தீவுகள் அணி. 

ஒருநாள் தொடர்

முதல் ஒருநாள் - பிப்ரவரி 6, ஆமதாபாத்
2-வது ஒருநாள் - பிப்ரவரி 9, ஜெய்ப்பூர்
3-வது ஒருநாள் - பிப்ரவரி 12, கொல்கத்தா

டி20  தொடர்

முதல் டி20 - பிப்ரவரி 15, கட்டாக்
2-வது டி20 - பிப்ரவரி 18, விசாகப்பட்டினம்
3-வது டி20 - பிப்ரவரி 20, திருவனந்தபுரம்

இந்தியாவில் இலங்கை

ஐபிஎல் போட்டிக்கு முன்பு இலங்கையுடன் டெஸ்ட், டி20 தொடர்களில் இந்தியா விளையாடுகிறது.

டெஸ்ட் தொடர்

முதல் டெஸ்ட் - பிப்ரவரி 25, பெங்களூர்
2-வது டெஸ்ட் - மார்ச் 5, மொஹலி

டி20 தொடர்

முதல் டி20 - மார்ச் 13, மொஹலி
2-வது டி20 - மார்ச் 15, தர்மசாலா
3-வது டி20 - மார்ச் 18, லக்னெள

ஐபிஎல் 2022

இலங்கை தொடருக்குப் பிறகு ஏப்ரல், மே மாதங்களில் ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதற்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. 

இந்தியாவில் தென்னாப்பிரிக்கா

ஐபிஎல் போட்டி முடிவடைந்த பிறகு தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்தியாவின் 2021-22 பருவத்தில் சென்னைக்கு இந்தத் தொடரில் தான் ஓர் ஆட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

டி20 தொடர்

முதல் டி20 - ஜூன் 9, சென்னை
2-வது டி20 - ஜூன் 12, பெங்களூர்
3-வது டி20 - ஜூன் 14, நாக்பூர்
4-வது டி20 - ஜூன் 17, ராஜ்கோட்
5-வது டி20 - ஜூன் 19, தில்லி

இந்திய அணியின் இங்கிலாந்துச் சுற்றுப்பயணம்

அடுத்த வருடம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடுகிறது. ரத்தான 5-வது டெஸ்ட் ஜூலை 1, 2022 அன்று எக்பாஸ்டனில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் தொடர்

5-வது டெஸ்ட் - ஜூலை 1, எக்பாஸ்டன்

டி20 தொடர்

முதல் டி20 - ஜூலை 7, ஏஜஸ் பெளல்
2-வது டி20 - ஜூலை 9, எக்பாஸ்டன்
3-வது டி20 - ஜூலை 10, டிரெண்ட்பிரிட்ஜ்

ஒருநாள் தொடர்

முதல் ஒருநாள் - ஜூலை 12, கியா ஓவல்
2-வது ஒருநாள் - ஜூலை 14, லார்ட்ஸ்
3-வது ஒருநாள் - ஜூலை 17, எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட்

2022 டி20 உலகக் கோப்பை

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com